Page Loader
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது 

எழுதியவர் Sindhuja SM
Mar 13, 2024
12:43 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று கைது செய்தது. பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குறைந்த தீவிரம் கொண்ட ஒரு வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால், 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஷபீர் என்ற நபர் இன்று காலை பல்லாரியில் வைத்து கைது செய்யப்பட்டார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஷபீர், ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வைத்த முக்கிய குற்றவாளியின் கூட்டாளியாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பெங்களூர்

குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் 

மார்ச் 3 ஆம் தேதி இந்த வழக்கை ஏற்று கொண்டு விசாரிக்க தொடங்கிய என்ஐஏ, வெடிகுண்டு வைத்ததாக நம்பப்படும் பிரதான சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மார்ச் 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் வெடிகுண்டு வைத்த குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சமீபத்தில் அறிவித்தது. அது போக, முக்கிய சந்தேக நபரின் சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ராமேஸ்வரம் கஃபே கடந்த வாரம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. அதன் நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன