Page Loader
விரைவில் விடாமுயற்சி அப்டேட் வெளியாகிறது என இணையத்தில் தகவல்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது

விரைவில் விடாமுயற்சி அப்டேட் வெளியாகிறது என இணையத்தில் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 13, 2024
04:47 pm

செய்தி முன்னோட்டம்

மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகலாம் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்பின்னர், அக்டோபர் மாதத்தில் துவங்கிய படப்பிடிப்பு, ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், அஸர்பைஜானில் நிலவிய கடும்குளிர் காரணமாக, ஜனவரி மாதம் படக்குழுவினர் சென்னை திரும்பினர். அடுத்த வாரத்திலிருந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தில், அஜித், த்ரிஷா தவிர, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் புகழ் ஆரவ், நடிகை ரெஜினா கசெண்ட்ராவும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசை, அனிருத்.

ட்விட்டர் அஞ்சல்

விடாமுயற்சி அப்டேட்?