
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் 2-வது சுற்றிற்கு முன்னேறிய பி.வி.சிந்து; அவரை பற்றி சில சுவாரசிய தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
முதல் சுற்றில் ஜெர்மனி வீராங்கனையான இவோன் லியுடன் மோதி வெற்றி பெற்றார்.
இனி நடக்கவிருக்கும் 2-வது சுற்றில் கொரியாவின் அன் சே யங்குடன் மோதவுள்ளார் சிந்து.
இந்த நிலையில் பி.வி.சிந்து பற்றி சில சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆரம்பகாலங்களில், புல்லேலா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற தினமும் 112 கிலோமீட்டர் பயணம் செய்தார். அவரது நேரம் தவறாமையும், அர்ப்பணிப்பும், விளையாட்டு மீது அவருக்கு இருந்த ஆர்வத்தையே வெளிக்காட்டுகிறது.
பி.வி.சிந்து
பி.வி.சிந்து பற்றி சில தகவல்கள்
ரியோ ஒலிம்பிக்கிற்கான பயிற்சியின்போது, அவரது பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த், இவரை மொபைல் பயன்படுத்தக்கூடாது என மூன்று மாத தடை விதித்திருந்தார்.
இதனால், விளையாட்டில் மேலும் கவனமும் அர்ப்பணிப்பும் மேம்படும் என்பதற்காக அவர் விதித்த தடையை, சிந்து சிரமேற்கொண்டு பின்பற்றினார்.
தனது 17 வயதிற்குள், உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து, விரைவாக பட்டியலில் முன்னேறினார்.
2012 இல் 17 வயதில், பி.வி.சிந்து, லக்னோவில் நடைபெற்ற ஜூனியர்-லெவல் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னுரிமை அளித்து, தன்னுடைய அக்காவின் திருமணத்திற்கு கூட செல்லவில்லையாம்