இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

21 Oct 2023

இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைத்து, சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

20 Oct 2023

சென்னை

கால்பந்து மைதானத்தினை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 

சென்னை கொளத்தூர் பகுதியினை சேர்ந்த பல்லவன் சாலையில் செயற்கை புல் தரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு 

அறிவியல், தொழில்நுட்ப ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்னமும் பல இடங்களில் மனித கழிவை மனிதனே அள்ளும் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

20 Oct 2023

பருவமழை

அரபிக் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 

தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், வரும் 22ம்.,தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

'டிடிவி தினகரன் திவாலானார்' என்று பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் 

வெளிநாடுகளிலிருந்து ரூ.62.61 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க அமெரிக்கா டாலர்களை, கடந்த 1995-96ம்.,ஆண்டின் காலகட்டத்தில் அங்கீகரிக்கப்படாத முகவர் மூலம் பெற்றதற்காகவும், அந்த டாலர்களை இங்கிலாந்திலுள்ள நிறுவனங்களில் சட்ட-விரோதமான முறையில் மாற்றிய குற்றத்திற்காகவும் அமமுக முன்னாள் பொது செயலாளரான டிடிவி தினகரன் மீது அன்னிய செலவாணி ஒழுங்குமுறை என்னும் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

20 Oct 2023

கேரளா

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கே.எஸ்.அச்சுதானந்தனின் 100வது பிறந்தநாள் 

கடந்த 1923ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி கேரளா ஆலப்புலா மாவட்டத்திலுள்ள புன்னப்புரா என்னும் கிராமத்தில் பிறந்தவர் தான் கே.எஸ்.அச்சுதானந்தன்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம் 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று(அக்.,19) உலக விபத்து தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

'நமோ பாரத்' ரயில் சேவையினை இன்று துவக்கி வைத்தார் பிரதமர் மோடி 

இந்தியா முழுவதும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் இடையே 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நிறுத்தம்?

தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

20 Oct 2023

கனடா

இந்தியாவிலிருந்து தூதர்களை திரும்பப் பெற்றுக் கொண்ட கனடா

இந்தியாவிலிருந்து தூதர்களை கனடா திரும்பப் பெற்றுக்கொண்டதால், இந்தியாவில் உள்ள அந்நாட்டின் தூதராக பணிகள் அனைத்தும் முடங்கின.

20 Oct 2023

பிரதமர்

மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பணம் வாங்கியது உண்மைதான் என தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி தெரிவித்துள்ளார்.

மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளார், நேற்று மாலை 5-மணிக்கு, மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.

பாலஸ்தீன அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி; இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல்

பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸுடன் வியாழக்கிழமை (அக்டோபர் 19) தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, காசா மருத்துவமனையில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

19 Oct 2023

சென்னை

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள்

தமிழ்நாடு மாநிலத்தில் ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட பண்டிகைகள் வார இறுதி நாட்களோடு இணைந்தவாறு வருவதால் தொடர் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

நாளை 'செல் ஒளிபரப்பு எச்சரிக்கை' சோதனை: பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என அரசு வேண்டுகோள்

பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்துக்கொள்ளவும், அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் விதமாகவும் நாளை(அக்.,20) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை' சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆசிரியராக தொடங்கி, அம்மாவாக மாறிய பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூர் என்றாலே அது ஆதிபராசக்தி கோவில் என்றாகி விட்டது.

மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார் 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை நிறுவி அதன் குருவாக இருந்து வந்தவர் தான் பங்காரு அடிகளார்(82).

19 Oct 2023

ஆந்திரா

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு 

திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ம் தேதி காலை கைது செய்யப்பட்டார்.

19 Oct 2023

சென்னை

நவம்பர் 4,5ஆம் தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு 

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருச்சி: ஆன்லைன் ஆர்டரில் கெட்டுப்போன திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி

திருச்சி-உறையூர் பகுதியினை சேர்ந்த ஆண்ட்ரூ, ஆன்லைனில், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையில், பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

19 Oct 2023

கொலை

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி?

டெல்லியில், இளம் பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

 மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் கட்டிட அனுமதிக்கான பட்டா சரிபார்ப்பு - தமிழக அரசு அசத்தல் 

தமிழ்நாடு மாநிலத்தில் பத்திரப்பதிவு முறைகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

பிறந்து 4 நாட்களே ஆன சிசுவின்  உடல் உறுப்புகள் தானம்

குஜராத் மாநிலம் சூரத் மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மூளைச்சாவு அடைந்த காரணத்தினால் அதன் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டுள்ளது.

19 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு 

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், அப்பகுதிகளில் சிக்கிய தமிழர்கள் தொடர்புக்கொள்ள தமிழக அரசு உதவி எண்களை அறிவித்தது.

ஐஐடி காரக்பூர் மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை

மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி காரக்பூர் கல்லூரியில் நான்காம் வகுப்பு மாணவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.

மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள்

தமிழ்நாடு, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள வானவன் மகாதேவி மீனவர்கள் தெருவினை சேர்ந்த சுப்ரமணியம்(50), என்பவருக்கு சொந்தமாக ஓர் ஃபைபர் படகு உள்ளது.

19 Oct 2023

டெல்லி

RRTS ரயில் சேவை, டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. கட்டணம் எவ்வளவு?

RRTS (Regional Rapid Transit System) திட்டத்தின் கீழ் டெல்லியில் முதல் ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (அக்டோபர் 21) முதல் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது RRTS ரயில் சேவை.

ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

18 Oct 2023

சென்னை

பதிவு செய்யப்படாத மகளிர் விடுதிகளுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை 

சென்னையில் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகள் முறையாக பதிவு செய்யப்படாமல் இயக்கப்பட்டு வந்தால் அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

18 Oct 2023

டெல்லி

15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- என்ன நடந்தது சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில்?

டெல்லியில் இளம் பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவிலுக்கு இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்கலாம்- மத்திய அரசு அனுமதி

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு, இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

பெங்களூரு பிரபல கேஃபேவில் தீ விபத்து; உயிர் சேதம் இல்லை எனத்தகவல் 

பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள தாவரேகெரே மெயின் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள கேஃபேவில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தினை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

'கள ஆய்வில் முதல் அமைச்சர்' என்னும் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார்.

18 Oct 2023

காசா

காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம்

நேற்று இரவு காசா மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 க்கும் மேற்பட்டோர் பலியானர்.

தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா.விருது அறிவிப்பு

2008ம்.,ஆண்டிலிருந்து ஐ.நா.,வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாடு அமைப்பானது முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகள் மூலம் நிலையான வளர்ச்சிப்பணிகளை கண்காணித்து, விருது வழங்கப்படுகிறது.

கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டு- பாஜக எம்பிக்கு எதிராக அவதூறு நோட்டீஸ் அனுப்பிய செய்த திரிணமூல் எம்பி

நாடாளுமன்றத்தில் தான் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக கூறிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் மற்றும் சில செய்தி நிறுவனங்கள் மீது திரிணமூல் எம்பி மகுவா மொய்த்ரா அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களின் அபராதம் மூலம் ரயில்வேக்கு ரூ.57.48 கோடி வருவாய்

தெற்கு ரயில்வே துறையின் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளும் பிரிவானது ரயில்களில் பயணம் செய்யும் மக்கள் பயணசீட்டு வைத்திருப்பதை உறுதி செய்ய டிக்கெட் பரிசோதனை செய்வதை தீவிரப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதற்கான கோரிக்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.