Page Loader
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

எழுதியவர் Nivetha P
Oct 19, 2023
12:47 pm

செய்தி முன்னோட்டம்

சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. அதன்படி இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுக்கள் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் 2 முறை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அந்த 2 முறையும் அவரது ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தனது ஜாமீன் மனுவினை தாக்கல் செய்தார்.

மனு 

'சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்புள்ளது' - நீதிபதி 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் மனுவில் உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், முழுமையாக அவர் குணமடையவில்லை. மீண்டும் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி, இந்த மனு மீதான விசாரணை இன்று(அக்.,19) நீதிபதி ஜெயச்சந்திரன் முன் நடந்தது. அப்போது, 'உடல்நிலை மற்றும் மருத்துவ காரணங்களை முன்வைத்து ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது' என்றும், செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்னமும் தலைமறைவாக இருக்கும் பட்சத்தில் ஜாமீன் அளித்தால் சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்புள்ளது' என்றும் கூறி ஜாமீன் தர மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.