NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு 
    இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு

    இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Oct 19, 2023
    02:23 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், அப்பகுதிகளில் சிக்கிய தமிழர்கள் தொடர்புக்கொள்ள தமிழக அரசு உதவி எண்களை அறிவித்தது.

    அந்த உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கி செய்வதறியாது தவித்த 158 தமிழர்களின் நிலவரம் குறித்த தகவல்கள் தெரியவந்தது என்று கூறப்படுகிறது.

    அவர்களின் தேவைகள் அயலக தமிழர் நலத்துறை மூலம் கேட்டறியப்பட்ட நிலையில் 4 கட்டங்களாக 98 தமிழர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு தங்கள் இல்லங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர் என்றும் தெரிகிறது.

    இதனை தொடர்ந்து நேற்று முன்தினம்(அக்.,17) மீண்டும் தமிழக அரசு சார்பில் 23 பேர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    ஆபரேஷன் அஜய் மூலம் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்ட இந்த 23 பேர் தமிழக அரசால் வரவேற்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இஸ்ரேல் 

    தமிழக அரசின் செலவில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு 

    தொடர்ந்து, அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக விமான பயணச்சீட்டுகளும் வழங்கப்பட்டது.

    அதன்படி சென்னை விமானநிலையம் வந்தடைந்த 17பேரை வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், துறை அலுவலர்கள், எம்.பி.கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    அதேப்போல் கோவை விமானநிலையம் சென்றடைந்த 4பேரை அமைச்சர்.,கே.எஸ்.மஸ்தான் வரவேற்று அரசின் செலவில் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுத்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    அதனைத்தொடர்ந்து, மதுரை சென்றடைந்த 2பேரைஅம்மாவட்ட நிர்வாகம் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

    இதுவரை இஸ்ரேலிலிருந்து 121 தமிழர்கள் தமிழகஅரசு சார்பிலும், 26 பேர் தங்கள் சொந்த செலவில் என மொத்தம் 147பேர் தமிழகம் வந்தடைந்துள்ளனர் என்று அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    பாலஸ்தீனம்
    தமிழக அரசு
    சென்னை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இஸ்ரேல்

    நாஜி வதை முகாம்களுக்கு தனது வம்சாவளியினரை அழைத்து சென்ற அமெரிக்கா அதிபர் பைடன் அமெரிக்கா
    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் கார்
    'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    பாலஸ்தீனம்

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு  இஸ்ரேல்
    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    தமிழக அரசு

    ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு  ராமநாதபுரம்
    விநாயகர் சிலைகளை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம் திமுக

    சென்னை

    திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு  திருப்பதி
    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தொல்.திருமாவளவன்   தொல். திருமாவளவன்
    பண மோசடி புகார்- ₹10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நோட்டீஸ் இசையமைப்பாளர்கள்
    வீடியோ கேம் விளையாடிய மாணவனுக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்ட அவலம்  வீடியோ கேம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025