தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா.விருது அறிவிப்பு
2008ம்.,ஆண்டிலிருந்து ஐ.நா.,வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாடு அமைப்பானது முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகள் மூலம் நிலையான வளர்ச்சிப்பணிகளை கண்காணித்து, விருது வழங்கப்படுகிறது. காலநிலை மாற்றத்திற்கான துறையில் முதலீட்டினை ஈர்த்து, கூட்டு முயற்சியாக புதிய அணுகுமுறைகளை செயல்பாட்டிற்கு கொண்டுவந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, இந்தாண்டிற்கான விருதுக்கு, தமிழக வழிகாட்டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதினை ஐநா.,வர்த்தக வளர்ச்சி மாநாட்டின் தலைவரான ரெபேக்கா கிரிஸ்பான், அபுதாபியில் நடந்த 8வது-உலக முதலீட்டாளர் மாநாட்டில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணுவுக்கு வழங்கினார். இந்நிலையில், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,"புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த முதலீடுகளை அதிகரிப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்கான ஐ.நா.,வின் 'முதலீட்டு ஊக்குவிப்பு விருது-2023'விருதுப்பெற்ற தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு எனது வாழ்த்துக்கள்"என்று பதிவிட்டுள்ளார்.