மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கே.எஸ்.அச்சுதானந்தனின் 100வது பிறந்தநாள்
செய்தி முன்னோட்டம்
கடந்த 1923ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி கேரளா ஆலப்புலா மாவட்டத்திலுள்ள புன்னப்புரா என்னும் கிராமத்தில் பிறந்தவர் தான் கே.எஸ்.அச்சுதானந்தன்.
ஆரம்ப பள்ளி கல்வியினை மட்டுமே முடித்த இவர் ஆலப்புலாவில் செயல்பட்டு வந்த தொழிற்சங்கத்தால் ஈர்க்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர், 1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. அப்போது அதிலிருந்து வெளியேறிய இவர், அவருடன் வெளியேறிய 32 பேருடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்னும் புது கட்சி ஒன்றினை துவங்கினார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதில் நிறுவன தலைவர்களுள் ஒருவராக இருந்து வந்துள்ளார்.
கட்சி
7 முறை சட்டசபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்
இதனை தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று கேரளா மாநிலத்தின் முதல்வர் தனது 82வது வயதில் பதவியேற்றார்.
மேலும் இவர் 7 முறை சட்டசபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடக்கும் ஆட்சியில் இவர் நிர்வாக சீர்திருத்தக்ஸகுழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே வயதான காரணத்தினால் சமீபகாலமாக இவர் எந்தவொரு அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் உள்ளார்.
இதன்படி, இன்று(அக்.,20) இவர் தனது 100வது பிறந்தநாள் தினத்தினை கொண்டாடும் நிலையில், தற்போதைய கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.