NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'டிடிவி தினகரன் திவாலானார்' என்று பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'டிடிவி தினகரன் திவாலானார்' என்று பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் 
    'டிடிவி தினகரன் திவாலானார்' என்று பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்

    'டிடிவி தினகரன் திவாலானார்' என்று பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 20, 2023
    05:36 pm

    செய்தி முன்னோட்டம்

    வெளிநாடுகளிலிருந்து ரூ.62.61 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க அமெரிக்கா டாலர்களை, கடந்த 1995-96ம்.,ஆண்டின் காலகட்டத்தில் அங்கீகரிக்கப்படாத முகவர் மூலம் பெற்றதற்காகவும், அந்த டாலர்களை இங்கிலாந்திலுள்ள நிறுவனங்களில் சட்ட-விரோதமான முறையில் மாற்றிய குற்றத்திற்காகவும் அமமுக முன்னாள் பொது செயலாளரான டிடிவி தினகரன் மீது அன்னிய செலவாணி ஒழுங்குமுறை என்னும் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    அதன்படி 2008ம் ஆண்டு தினகரனுக்கு அமலாக்க இயக்குநரகம் ரூ.31 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன், அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், ரூ.31 கோடியினை ரூ.28 கோடியாக குறைத்து உத்தரவு பிறப்பித்தது.

    இந்த அபராத தொகையினை அவர் கட்டாத காரணத்தினால் டிடிவி தினகரன் திவாலாகிவிட்டார் என்று அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பித்தது.

    வழக்கு 

    அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி 

    இதனையடுத்து, இந்த நோட்டீஸை எதிர்த்து தினகரன் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    இதன் விசாரணையின்போது, 'டி.டி.வி.தினகரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே இதுமாதிரியான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது'என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த நோட்டீஸ் செல்லாது என்று 2003ம் ஆண்டு உத்தரவிட்டார்.

    இதனிடையே கடந்த 2005ல்-சென்னை உயர்நீதிமன்றத்தின் தனிநீதிபதி தீர்ப்பினை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.

    இம்மனு மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட்.,மாதம் விசாரணைக்கு வந்தநிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பின் தேதியினை குறிப்பிடாமல் கடந்த செப்., 14ம்தேதி வழக்கினை ஒத்திவைத்தனர்.

    அதன்படி இன்று(அக்.,20)இதற்கான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அதில், "டி.டி.வி.தினகரன் திவாலாகிவிட்டதாக பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது" என்றுக்கூறியதோடு, அமலாக்கத்துறை தனிநீதிபதியின் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமலாக்க இயக்குநரகம்
    டிடிவி தினகரன்
    அமெரிக்கா
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா  பஹல்காம்
    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு
    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் - இருவரும் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு  ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுகவும் அமமுகவும் இணைந்து செயல்படும்: டிடிவி தினகரன்  தமிழ்நாடு
    அமமுக பொதுச் செயலாளராக மீண்டும் டி.டி.வி.தினகரன் தேர்வு அமமுக

    அமெரிக்கா

    'இது 9/11 பயங்கரவாத தாக்குதலை போன்றது': ஐநா சபைக்கான இஸ்ரேலிய தூதர் பேச்சு இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா  இஸ்ரேல்
    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா? சீனா

    சென்னை உயர் நீதிமன்றம்

    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  தமிழ்நாடு
    கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஆயுர்வேதம்
    கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - 10 பேரின் ஆயுள் தண்டனையினை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்  சேலம்
    செந்தில் பாலாஜியின் மனைவி வழக்கு: நீதிபதி விலகியதால் புதிய அமர்வு அறிவிப்பு தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025