NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள்
    (மாதிரி புகைப்படம்); தமிழக மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

    மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள்

    எழுதியவர் Nivetha P
    Oct 19, 2023
    11:41 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள வானவன் மகாதேவி மீனவர்கள் தெருவினை சேர்ந்த சுப்ரமணியம்(50), என்பவருக்கு சொந்தமாக ஓர் ஃபைபர் படகு உள்ளது.

    அதில், அவரோடு நேற்று முன்தினம் மதியம் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(55), முருகேசன்(41), ராஜகோபால்(62), மகாலிங்கம்(60) உள்ளிட்ட 5 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாக தெரிகிறது.

    அதன்படி கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில், 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அவர்கள் அன்று இரவு மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

    மீனவர்கள் 

    அதிவேக படகில் வந்த கடற்கொள்ளையர்கள் 

    அப்போது அவர்கள் படகு அருகே அதிவேகமாக ஓர் படகு வந்துள்ளது.

    அதில் வந்த 4 இலங்கை கடற்கொள்ளையர்கள், இவர்களின் படகில் ஏறி இரும்புக்கம்பிகள், கட்டைகள் கொண்டு படகிலிருந்த 5 பேரையும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

    மேலும் அப்படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, 600 கிலோ எடைகொண்ட வலைகள், பிடித்து வைங்கப்பட்டிருந்த மீன்கள், 2 சிக்னல் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

    2 படகு 

    மற்றொரு படகையும் சூறையாடிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 

    அதேபோல, அதே பகுதியினை சேர்ந்த முருகா(36) என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் செல்வம்(35), சண்முகவேல்(35), சுப்பிரமணியம்(37) உள்ளிட்ட 4 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

    அவர்களையும், இதே இலங்கை கடற்கரை கொள்ளையர்கள் தாக்கி, படகிலிருந்த 40 கிலோ மீன், வெள்ளி அரைஞாண் கயிறு, வெள்ளி-தங்கச்சங்கிலிகள், 150 கிலோ எடைகொண்ட வலைகள், பேட்டரி செல்போன், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    வேதனை 

    பொருட்களை பறிகொடுத்த வேதனையில் வேதாரண்ய மீனவர்கள் 

    அதனை தொடர்ந்து பொருட்களை பறிகொடுத்த வேதனையோடு, முருகானந்தம் உள்ளிட்ட 4 மீனவர்களும் தங்கள் படகில் கரைக்கு திரும்பி கொண்டிருந்தபோது, பாதி வழியில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த சுப்ரமணியம் உள்ளிட்ட 5 மீனவர்களையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    அவர்களை மீட்டதோடு, கடலில் சிறிது தூரத்தில் மிதந்து கொண்டிருந்த, சுப்ரமணியத்திற்கு சொந்தமான படகையும் கண்டுபிடித்துள்ளனர்.

    அதன் பின்னர், 2 படகுகளில் 9 மீனவர்களும் நேற்று(அக்.,18)காலை கரைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

    சிகிச்சை 

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை 

    தற்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் 9 பேரும், நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 23, 25 மற்றும் இம்மாதம் 6ம் தேதி வெள்ளப்பள்ளம், செருதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளையடித்து சென்றனர்.

    தற்போது, மீண்டும் இத்தகைய கொள்ளை சம்பவம் நடந்திருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் 2 படகிலும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கொள்ளை
    இலங்கை
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா

    தமிழ்நாடு

    'அணையை தெர்மோகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்': சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் நக்கல் துரைமுருகன்
    காவிரி விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம்  காவிரி
    16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்  தமிழக அரசு

    கொள்ளை

    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை  சிங்கப்பூர்
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை பலாத்காரம்

    இலங்கை

    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் மு.க ஸ்டாலின்
    இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்தால் கடலில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு இந்தியா
    தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு தமிழ்நாடு
    இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் வெளியுறவுத்துறை

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025