15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- என்ன நடந்தது சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில்?
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் இளம் பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ரவி கபூர், அமித் சுக்லா, அஜய் குமார், பல்ஜீத் மாலிக் என 4 பேரும் குற்றவாளிகள் எனவும், இதில் அஜய் சேத்தி குற்றத்தை செய்ய உடந்தையாக இருந்துள்ளதாக சாகேத் நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு இருந்தாலும், சட்ட சிக்கல்களால் தண்டனை அறிவிக்கப்படுவது தாமதமானது குறிப்பிடத்தக்கது.
2nd card
என்ன ஆனது சோமியா விஸ்வநாதனுக்கு?
கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், வேலையை முடித்துவிட்டு, தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் தனது காரில் வீடு திரும்பி கொண்டு இருந்த சௌமியா விஸ்வநாதன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவர் இந்தியா டுடே நிறுவனத்தின், 'ஹெட்லைன்ஸ் டுடே' என என்ற புதிதாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
சௌமியா விஸ்வநாதன் முதலில் கார் விபத்தில் இறந்தார் என சொல்லப்பட்டது. பின்னர் வெளியான உடற்கூறு ஆய்வில், அவரது தலையில் துப்பாக்கி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்த அவர் கொலை செய்யப்பட்டார் என்பது உறுதியானது.
மேலும் போலீசார் கைப்பற்றிய சிசிடிவி கட்சியில், அவரது கார் வேறொரு காரால் துரத்தப்பட்டு அவர் சுடப்பட்டது தெரியவந்தது.
3rd card
கொலை "சிலிர்ப்பாக" இருந்தது என விவரித்த கொலையாளிகள்
போலீசார் இந்த வழக்கு குறித்து, சம்பவம் நடந்த இடத்தில் விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் சில மாதங்கள் கழித்து ஃபரிதாபாத் பகுதியில் வேறொரு இளம் பெண் கொலை வழக்கில் போலீசார் இருவரை கைது செய்தனர்.
ரவி கபூர், அமித் சுக்லா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்த நிலையில், சௌமியா விஸ்வநாதனை தாங்கள் சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் அந்தக்கொலையை "சிலிர்ப்பான சம்பவம்" என அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.
பின்னர் போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, கடந்த 2009 ஆம் ஆண்டு 620 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் 'திருட்டு' கொலைக்கு காரணமாக சொல்லப்பட்டிருந்தது.
தற்போது நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.