காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம்
நேற்று இரவு காசா மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 க்கும் மேற்பட்டோர் பலியானர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்ததோடு, அக்டோபர் 7-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பொதுமக்கள் உயிரிழந்தது குறித்தும் கவலை தெரிவித்தார். இன்று தன்னுடைய அதிரகாரபூர்வ எக்ஸ் தளத்தில் இந்த செய்தியை பதிவிட்ட பிரதமர், தாக்குதலில் இறந்தவர்கள் குறித்து, "ஆழ்ந்த அதிர்ச்சியில்" இருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவிப்பதாகவும் பிரதமர் கூறினார். அதோடு, இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். "நடந்துகொண்டிருக்கும் மோதலில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தீவிரமான மற்றும் கவலைக்குரிய விஷயம். . சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்," என அவரது பதிவு தெரிவிக்கிறது