மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய வங்கக்கடல் பகுதியில் வரும் 21ம்.,தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று(அக்.,19)முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அக்.,20ம்.,தேதி வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக நீங்கிய நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.