Page Loader
கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு 
கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு

கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு 

எழுதியவர் Nivetha P
Oct 20, 2023
07:28 pm

செய்தி முன்னோட்டம்

அறிவியல், தொழில்நுட்ப ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்னமும் பல இடங்களில் மனித கழிவை மனிதனே அள்ளும் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இது போன்ற பணிகளில் ஈடுபடுகையில், பல நேரங்களில் விஷ வாயு தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று(அக்.,20) உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்தர் பட், அரவிந்த் குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்தது. இதனிடையே நீதிபதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.

வழக்கு 

மத்திய-மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் - நீதிபதிகள் 

அதன்படி, கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது, உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.30 லட்சம் வரை இழப்பீடு வழங்கவேண்டியிருக்கும். அதுவே நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டால் ரூ.20 லட்சம் இழப்பீடும், இதர பாதிப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையினை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அதேபோல் இதனை மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஒன்றாக இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த நடைமுறையினை மாற்றியமைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.