Page Loader
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு 
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு 

எழுதியவர் Nivetha P
Oct 19, 2023
06:26 pm

செய்தி முன்னோட்டம்

திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ம் தேதி காலை கைது செய்யப்பட்டார். இந்த நிதி மோசடியின் பின்னணியில் சந்திரபாபு நாயுடுவும் மற்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. 2014ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக இருந்த போது இந்த ஊழல் நடந்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் பெயரில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

ஊழல் 

வரும் நவம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்த திறன் மேம்பாட்டுக் கழக ஊழலில் அரசுக்கு ரூ.371 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. சந்திரபாபு நாயுடு தரப்பில் கோரப்பட்ட ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்படி இன்றுடன்(அக்.,19) இவரது நீதிமன்ற காவல் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து அவர் விஜயவாடாவில் அமைந்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி தன்னிடம் விசாரிக்கையில், சிறையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இதன் பின்னர் அவரின் நீதிமன்ற காவலை வரும் நவம்பர் 1ம்.,தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இவரது நீதிமன்ற காவல் 3 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.