Page Loader
பெங்களூரு பிரபல கேஃபேவில் தீ விபத்து; உயிர் சேதம் இல்லை எனத்தகவல் 
பெங்களூரு பிரபல கேஃபேவில் தீ விபத்து

பெங்களூரு பிரபல கேஃபேவில் தீ விபத்து; உயிர் சேதம் இல்லை எனத்தகவல் 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 18, 2023
06:21 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள தாவரேகெரே மெயின் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள கேஃபேவில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிகாரிகளின் கூற்றுப்படி, கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அமைந்துள்ள மட்பைப் கஃபே (Mudpipe Cafe) என்ற ஹூக்கா பார்லரில், காலை 11:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு, கீழ் தளத்தில் அமைந்துள்ள கல்ட்(CULT) ஃபிட்னஸ் ஜிம்மிற்கு பரவியது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். எனினும், கீழே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பைக்குகளும், கட்டிடத்தின் அருகில் உள்ள ஷோரூமுக்குள் இருந்த ஒரு காரும் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பெங்களூரு பிரபல கேஃபேவில் தீ விபத்து