Page Loader
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 18, 2023
02:18 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதற்கான கோரிக்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தற்போது 4% வரை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வுதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் உயர்த்தப்படவிருக்கிறது. இந்த மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இன்றைய நாளின் இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவபவர்கள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணமானது தற்போது 42%-தத்தில் இருந்து 46% ஆக அதிகரித்திருக்கிறது. தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் இந்த அகவிலைப்படியானது 2023 ஜூலை 1-ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படவிருக்கிறது. அப்படியென்றால், ஜூலை 1-க்கு பிறகு கொடுக்கப்படவேண்டிய தொகையையும் சேர்த்து அளிக்கவிருக்கிறது மத்திய அரசு.

ட்விட்டர் அஞ்சல்

அகவிலைப்படியை உயர்த்திய மத்திய அரசு: