
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்
செய்தி முன்னோட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை நிறுவி அதன் குருவாக இருந்து வந்தவர் தான் பங்காரு அடிகளார்(82).
இந்த சித்தர் பீடம் சார்பில் பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவ கல்லூரி உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு இந்திய அரசு பங்காரு அடிகளாரின் ஆன்மீகம் ரீதியான சேவைகளை பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.
தமிழ்நாடு, இந்தியாவை தாண்டி, இவருக்கு வெளிநாடுகளிலும் பக்தர்கள் உள்ள நிலையில், அவர்களால் 'அம்மா' என்று இவர் அழைக்கப்பட்டு வந்தார்.
இதனிடையே கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று(அக்.,19)திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
பங்காரு அடிகளார் காலமானார்
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார் !#Melmaruvatur #BangaruAdigalar #RIPBangaruAdigalar #KalaignarSeithigal pic.twitter.com/XhVekJMQmB
— Kalaignar Seithigal (@Kalaignarnews) October 19, 2023