
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
செய்தி முன்னோட்டம்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைத்து, சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "இந்தியாவில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலை நாட்டவும், அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திடவும்" சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான அரசு சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பை தேர்தல் பிரச்சாரமாக முன்னெடுத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதம்
"இந்தியாவில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட, சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்" என வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர்… pic.twitter.com/E81KVzKNr4
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 21, 2023