கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டு- பாஜக எம்பிக்கு எதிராக அவதூறு நோட்டீஸ் அனுப்பிய செய்த திரிணமூல் எம்பி
நாடாளுமன்றத்தில் தான் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக கூறிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் மற்றும் சில செய்தி நிறுவனங்கள் மீது திரிணமூல் எம்பி மகுவா மொய்த்ரா அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கு வரும் 20ஆம் தேதி, நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் விசாரணைக்கு வர இருக்கிறது. மேற்குவங்கத்தின் கச்சார் எம்பி ஆன மொய்த்ரா மீது பாஜக எம்பி துபே, மக்களவை சபாநாயகர் ஓம் பிரில்லாவிடம் வழங்கிய கடிதத்தில், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக ஹிராநந்தனி குழுமத்திடம் மகுவா மொய்த்ரா பணம் பெற்றதாக கூறப்பட்டிருந்தது. இந்த புகாரை சபாநாயகர் நாடாளுமன்ற நெறிமுறை குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளார். அது வரும் 26 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
பாஜக எம்பி வழங்கிய கடிதத்தில் என்ன இருந்தது?
பாஜக எம்பி வழங்கிய கடிதத்தில், எரிசக்தி மற்றும் கட்டமைப்பு சார்ந்த ஒப்பந்தத்தை அதானி குழுமத்திடம், ஹிராநந்தனி குழுமம் இழந்தது. இதனை அடுத்து பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக கேள்வி கேட்பதற்காக, எம்பி மொய்த்ராவுக்கு ஹிராநந்தனி குழுமம் சார்பில் பணம் மற்றும் வெகுமதிகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த் தன்னிடம் வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை, மொய்த்ரா கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள், ஹிராநந்தனி குழுமத்தின் தர்ஷன் என்பவரின் உத்தரவின் பேரில் கேட்கப்பட்டதாக கூறியிருந்தார். இதைக்கேட்டதற்காக, மொய்த்ராவுக்கு, தர்ஷன் ₹2 கோடிக்கு காசோலை மற்றும் விலையுறைந்த ஐபோன் உள்ளிட்டவற்றை பரிசாக அளித்ததாக கூறியிருந்தார்.
புகாரை முற்றிலுமாக மறுத்துள்ள மகுவா மொய்த்ரா
இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள திரிணமூல் எம்பி புகாரை முற்றிலுமாக மறுத்துள்ள, இது அடிப்படைய "ஆதாரம் அற்றது" எனக் கூறியுள்ளார். பாஜக எம்பி மற்றும் வழக்கறிஞரின் குற்றச்சாட்டை எதிர்த்து, மகுவா மொய்த்ரா அவதூறு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீஸில், ஜெய் ஆனந்தம் தானும் நண்பர்களாக இருந்ததாகவும், அதன்பின் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்ததாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தன் மீது அவர் களங்கம் சுமத்துவதற்காகவும், நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் இவ்வாறு செய்வதாக கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹிராநந்தனி குழுமம், "நாங்கள் எப்போதும் அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டதில்லை. எங்கள் குழு தேசத்திற்காக அரசாங்கத்துடன் எப்போதும் இணைந்து பணியாற்றி வருகிறது. அதையே நாங்கள் தொடர்ந்து செய்வோம்" எனக் கூறியிருந்தது.