
நாளை 'செல் ஒளிபரப்பு எச்சரிக்கை' சோதனை: பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என அரசு வேண்டுகோள்
செய்தி முன்னோட்டம்
பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்துக்கொள்ளவும், அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் விதமாகவும் நாளை(அக்.,20) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை' சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 'செல் ஒளிபரப்பு எச்சரிக்கை' என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து தொலைபேசிகளுக்கும் இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கை செய்திகள் ஒரே நேரத்தில் சென்றடைய கூடிய வசதிகள் உள்ளது.
சுனாமி, மழை, பூகம்பம் போன்ற கடுமையான எச்சரிக்கைகள். பாதுகாப்பு அறிவிப்புகள், வெளியேற்ற செய்திகள் உள்ளிட்ட பல அவசரகால எச்சரிக்கைகளை வழங்கவே இந்த சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் கூறப்படுகிறது.
எச்சரிக்கை
சோதனை காலத்தின் பொழுது மக்களின் மொபைல் போன்களுக்கு பல தரப்பட்ட எச்சரிக்கைகள் வரக்கூடும்
இதன் மூலம் ஒரே நேரத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்கள், பேரிடர் குறித்த எச்சரிக்கை தகவல்கள், நெருக்கடியான சூழல் குறித்த விவரங்களை உரிய நேரத்தில் தெரிவிக்கப்படவுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதன் சோதனை நடத்தப்படுகையில் மக்களின் மொபைல் போன்களுக்கு பல தரப்பட்ட எச்சரிக்கைகள் வரக்கூடும்.
இது திட்டமிடப்பட்டுள்ள சோதனை காலத்தின் ஓர் பகுதியே தவிர உண்மையான அவசரநிலையினை குறிப்பதில்லை.
எனவே மக்கள் இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்றும், பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த சோதனையினை மேற்கொள்ளவுள்ளது.