
மில்லியன் கணக்கான மொபைல்களுக்கு இந்திய அரசாங்கம் அனுப்பிய அவசர எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இன்று காலை, இந்தியாவில் உள்ள பல மொபைல் போன்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு அவசர எச்சரிக்கையை அனுப்பி இருந்தது.
பெரும்பாலான ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மொபைல்களுக்கு இன்று காலை 11:35 மணியளவில் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால்(NDMA) பயன்படுத்தப்படும் நாட்டின் புதிய அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிப்பதற்காகவே இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
இந்தியா முழுவதும் உள்ள பல மொபைல்களுக்கு இந்த அவசரகால எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன.
இந்த எச்சரிக்கையை பெற்ற மொபைல் போன்களில் உரத்த 'பீப்' சத்தம் கேட்டது.
அதோடு, "அவசர எச்சரிக்கை: கடுமையானது" என்ற ஃபிளாஷ் செய்தியும் அவர்களது மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன.
வ்க்ஜபவ
செல் ஒலிபரப்பு அமைப்பு மூலம் இந்த செய்திகள் அனுப்பப்பட்டன
இந்த எச்சரிக்கை இரண்டு முறை அனுப்பட்டது. முதலில் ஆங்கிலத்திலும் சில நிமிட இடைவெளிக்கு பிறகு இந்தி மொழியிலும் இந்த செய்தி அனுப்பப்பட்டிருந்தது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) கூற்றுப்படி, எச்சரிக்கை அமைப்பின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிவதற்கும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இன்று காலை 11:30 மற்றும் 11:44 மணிக்கு இடையே செல் ஒலிபரப்பு அமைப்பு(CBS) மூலம் இந்த செய்திகள் அனுப்பப்பட்டன.
இதேபோன்ற ஃபிளாஷ் செய்தி சில வாரங்களுக்கு முன்பு பல பயனர்களுக்கு அனுப்பப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
தொலைத்தொடர்பு செல் ஒலிபரப்பு அமைப்பு(DoT CBS) பல்வேறு பிராந்தியங்களில் அவ்வப்போது இதுபோன்ற சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மொபைல் ஆபரேட்டர்களின் அவசர எச்சரிக்கை ஒளிபரப்பு திறன்களை மதிப்பிடுவதற்காக இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன.