
'நமோ பாரத்' ரயில் சேவையினை இன்று துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் இடையே 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மணிக்கு 160கிமீ., வேகத்திற்கு செல்லக்கூடிய அதிவேக ரயில் சேவையினை துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ரேபிட் டிரான்சிஸ்ட் ரயிலான இதற்கு 'நமோ பாரத்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவையானது முதற்கட்டமாக சாஹிபாபாத்-துஹாய் டிப்போ இடையே 17கிமீ., நீளமுள்ள வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.
அதன்படி இந்த ரயில் சேவையினை பிரதமர் மோடி இன்று(அக்.,20)கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தற்போது சாஹிபாபாத்-துஹாய் இடையே பயணநேரம் 30-35 நிமிடங்கள் ஆகும் நிலையில், 'நமோ பாரத்' ரயில் சேவை மூலம் வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
'நமோ பாரத்' ரயில் சேவை
#அரசியல்clicks | ‘நமோ பாரத்’ ரயிலில் மாணவர்களுடன் பயணித்தார் பிரதமர் மோடி!#SunNews | #NamoBharat | #RRTS | #PMModi pic.twitter.com/4fsVIP9JKz
— Sun News (@sunnewstamil) October 20, 2023