Page Loader
ஐஐடி காரக்பூர் மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை செய்து கொண்ட மாணவர் கிரண், தனது ப்ராஜெக்ட்டை முடிக்க பேராசிரியரிடம் கூடுதல் அவகாசம் கேட்டதாகவும், பேராசிரியர் அவகாசம் அளிக்காததால் தன் மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கிரனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

ஐஐடி காரக்பூர் மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை

எழுதியவர் Srinath r
Oct 19, 2023
12:57 pm

செய்தி முன்னோட்டம்

மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி காரக்பூர் கல்லூரியில் நான்காம் வகுப்பு மாணவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நான்காம் ஆண்டு மின் பொறியியல்துறை மாணவரான கிரண் சந்திரா, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த செவ்வாய்க்கிழமை என்று தனது இரண்டு நண்பர்களுடன் அறையில் இருந்த கிரண் சந்திரா, அவர்கள் இருவரும் வெளியேறிய ஒரு மணி நேரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்தார். பின்னர் அவரை மீட்டு பிசி ராய் தொழில்நுட்ப மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் தந்தை, மாணவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறியுள்ளார்