Loading...
பெத்தி படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து! கோவை கங்கா மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை
கோவையில் நடிகர் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை

பெத்தி படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து! கோவை கங்கா மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 27, 2026
11:22 am

செய்தி முன்னோட்டம்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள பெத்தி (Peddi) என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். விளையாட்டு மற்றும் மல்யுத்த பின்னணியைக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, எதிர்பாராதவிதமாக அவரது மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட போதிலும், படத்தின் பணிகளும் விளம்பர நிகழ்வுகளும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர் அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டு பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார்.

கோவை

கோவை மருத்துவமனையில் குடும்பத்தினருடன் அனுமதி

படத்தின் பணிகள் மற்றும் விளம்பர நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடிகர் ராம் சரண் தனது மணிக்கட்டு காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.

இதற்காக அவர் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் கோவை நகருக்கு வருகை தந்துள்ளார்.

எலும்பு முறிவு மற்றும் நரம்பியல் சிகிச்சைக்குப் பெயர் பெற்ற கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் அவரது தந்தை சிரஞ்சீவி, தாய் சுரேகா மற்றும் மனைவி உபாசனா ஆகியோர் உடனிருக்கின்றனர்.

அறுவை சிகிச்சை

மணிக்கட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை

மருத்துவமனை வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, பெத்தி படத்தின் தீவிரமான மல்யுத்தக் காட்சிகளில் நடித்தபோது ராம் சரணின் மணிக்கட்டு ஜவ்வுப் பகுதியில் கிழிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவருக்கு கையில் தீவிர வலி இருந்து வந்தது.

தற்போது கை மற்றும் மணிக்கட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களின் மேற்பார்வையில் அவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் சில வாரங்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவுள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்களின் பிரார்த்தனை

நடிகர் ராம் சரண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியானது முதல், அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து பழைய உற்சாகத்துடன் திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, சமீபத்தில் அவரது குடும்பத்தில் சிரஞ்சீவிக்குத் தோள்பட்டை அறுவை சிகிச்சையும், பவன் கல்யாணுக்கு மும்பையில் அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது ராம் சரணிற்கும் அறுவை சிகிச்சை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு

சிகிச்சைக்குப் பின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் பங்கேற்பு

மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில வாரங்கள் முழுமையான ஓய்வில் இருக்கும் ராம் சரண், காயம் முழுமையாகக் குணமடைந்த பிறகே மீண்டும் திரைப்படப் படப்பிடிப்புகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெத்தி படத்தின் ரிலீஸை தொடர்ந்து, அவர் அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ஆர்சி 17 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த ஓய்வுக்காலத்திற்கு பிறகே அந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புத் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT