Loading...
நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதன்முறையாக தரையிறங்கிய ரஷ்ய விமானங்கள்: BRICS உச்சி மாநாட்டிற்கான தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்
நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ரஷ்ய விமானங்கள்

நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதன்முறையாக தரையிறங்கிய ரஷ்ய விமானங்கள்: BRICS உச்சி மாநாட்டிற்கான தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2026
09:47 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு, நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதன்முறையாக 3 ரஷ்ய ராணுவ விமானங்கள் தரையிறங்கியுள்ளன. இப்புதிய விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானம் ஒன்று தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும். செவ்வாய்க்கிழமை காலை 5:30 மணியளவில் IL-76 ரக ராணுவப் போக்குவரத்து விமானம் உட்பட 3 ரஷ்ய விமானங்கள் நொய்டா விமான ஓடுதளத்தில் தரையிறங்கின. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வருகைக்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரஷ்ய ராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதுவரை இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு ராணுவ விமானங்கள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டு வந்தன.

தற்போது முதல்முறையாக நொய்டா விமான நிலையம் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது இப்பகுதிக்கு கிடைத்த முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

தரையிறக்கப்பட்ட 3 விமானங்களும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டு, ரஷ்ய குழுவினர் மற்றும் இந்திய பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்படப் பல சர்வதேசத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அதிபர் புடினின் பிரதான விமானமும் நோய்டா விமான நிலையத்தைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT