Loading...
நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது? நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்
நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்

நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது? நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2026
11:22 am

செய்தி முன்னோட்டம்

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நேரம், ஊக்கத்தொகை வழங்கும் முறையில் பாரபட்சத்தை களைதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம்(UFBU) சார்பில் செப்டம்பர் 11 நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 4 நாட்கள் வங்கிகள் இயங்காத சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் 11 நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், செப்டம்பர் 12 ,இரண்டாம் சனிக்கிழமை என்பதால் வங்கிப் பொது விடுமுறை. அதை தொடர்ந்து, செப்டம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் செப்டம்பர் 14 விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறை என 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோரிக்கை

வேலை நிறுத்தத்திற்கான முக்கியக் கோரிக்கைகள்

வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே வேலை நாட்களாக மாற்றப்பட வேண்டும். (தினசரி பணி நேரத்தில் 40 நிமிடங்கள் வரை உயர்த்த சம்மதித்தும் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்).

உயர் அதிகாரிகளுக்கும் சாதாரண ஊழியர்களுக்கும் இடையே பாரபட்சமாக வழங்கப்படும் 'செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை'(PLI) முறையை சீரமைக்க வேண்டும்.

ஓய்வூதியத் திட்டங்களை உயர்த்த வேண்டும் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) உள்ளவர்களைப் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்ற வாய்ப்பளிக்க வேண்டும்.

இதனால் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு நேரடி வங்கிச் சேவைகள், காசோலை பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணச் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ADVERTISEMENT