Loading...
அமெரிக்க இடைத்தேர்தல்: குடியரசுத் கட்சி வென்றால் மக்களுக்கு $5,000 'ட்ரம்ப் டிவிடெண்ட்'
இடைத்தேர்தலில் குடியரசுத் கட்சி வென்றால் மக்களுக்கு $5,000 'ட்ரம்ப் டிவிடெண்ட்'

அமெரிக்க இடைத்தேர்தல்: குடியரசுத் கட்சி வென்றால் மக்களுக்கு $5,000 'ட்ரம்ப் டிவிடெண்ட்'

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2026
10:10 am

செய்தி முன்னோட்டம்

டாலஸில் நடைபெற்ற குடியரசு கட்சியின் இடைத்தேர்தல் மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரும் நவம்பர் இடைத்தேர்தலில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் குடியரசு கட்சி பெரும்பான்மையை தக்கவைத்தால், அமெரிக்க மக்களுக்கு தலா $5,000 (சுமார் ₹4.2 லட்சத்திற்கும் மேல்) 'ட்ரம்ப் டிவிடெண்ட்' தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஒரு வெற்றிகரமான நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு லாப பங்கு அளிப்பது போல, அமெரிக்க பொருளாதார வெற்றியின் பலனை மக்களுக்கு வழங்குவதாக ட்ரம்ப் இதனை விவரித்தார். இத்தொகை அமெரிக்கக் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த $5,000 தொகையை முழுமையாக அமெரிக்காவிற்குள்ளேயே செலவிட வேண்டும் என்பது நிபந்தனையாகும். இறக்குமதி வரிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் இத்திட்டம் நிதியளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரீபேட் தொகை

Obamacare திட்டத்தின் கீழ் $500 ரீபேட் செக்

இடைத்தேர்தலுக்கு முன்பாகவே சுமார் 10 லட்சம் அமெரிக்கர்களுக்கு $500 ரீபேட் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஜோ பைடன் நிர்வாகத்தின் போது 'ஒபாமாகேர்' காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட 30 மாநிலங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இத்தொகை திரும்ப வழங்கப்படவுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்படும் $500 மில்லியன் நிதி, காப்பீட்டு நிறுவனங்களால் மிகையாக வசூலிக்கப்பட்டு அரசின் கணக்கில் மீதமாக உள்ள நிதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலாபாமா, புளோரிடா, டெக்சாஸ், மிச்சிகன், ஓஹியோ உள்ளிட்ட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் பயனடைவர்.

ஈரான் போர் மற்றும் பணவீக்கம் காரணமாகத் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வாக்காளர்களைக் கவரும் வகையில் ட்ரம்பின் இந்த நிதிச் சலுகை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT