நடிகர் தனுஷ் அரசியல் வருகை குறித்து தீவிரம்? ரசிகர் மன்றக் கூட்டத்தில் பேசிய பேச்சு வைரல்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான தனுஷ், தனது ரசிகர்களை மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, அவரது அரசியல் வருகை குறித்த ஊகங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று தனது ரசிகர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட இரத்த தான முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய தனுஷ், வெறும் திரைப்பட கொண்டாட்டங்களை தாண்டி சமூக நலப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தன் ஆதரவாளர்களை வலியுறுத்தினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Dhanush indirectly hints about his political entry 👀🔥 pic.twitter.com/1HB0abdOup
— AmuthaBharathi (@CinemaWithAB) July 26, 2026
பேச்சு
"ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் வேண்டும்": ரசிகர்கள் மத்தியில் பேச்சு
தனுஷ் பேசுகையில், "இவ்வளவு பேர் ஒரே இடத்தில் கூடியிருக்கிறீர்கள். இந்த ஒற்றுமையில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. இந்த ஒற்றுமைக்கு நாம் ஒரு நல்நோக்கத்தைக் கொடுக்க வேண்டும். வெறும் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் சந்திப்புகளுடன் நின்றுவிடாமல், மேலும் பல மக்கள் நலப் பணிகளில் நாம் ஈடுபட வேண்டும். உங்கள் பகுதியில் வாழும் மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். உங்களைக் கண்டு நான் இன்னும் பெருமைப்பட வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன்."
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை தொடர்ந்து தனுஷும் விரைவில் அரசியல் கட்சி தொடங்கக்கூடும் என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இணையத்தில் தீவிரமாக விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
சர்ச்சை
தேசிய விருது சர்ச்சை குறித்து விளக்கம்
அதே நிகழ்வில், தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' மற்றும் அவரே இயக்கி நடித்த 'ராயன்' படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கும் பதிலளித்தார்.
2024-ஆம் ஆண்டில் 'ராயன்' படத்தை விடச் சிறந்த தமிழ் திரைப்படங்கள் நிச்சயமாக இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்ட அவர், அதே நேரத்தில் ஒரே ஆண்டில் ஒரு தமிழ் நடிகருக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ள பெருமையை அனைவரும் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.