மொபைல் டேட்டா தேவையில்லை, போனை தட்டினாலே UPI பணம் செலுத்தலாம்: RBI-யின் புதிய 'Tap and Pay' வசதி
செய்தி முன்னோட்டம்
மொபைல் டேட்டா/இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும், மிக எளிதாக யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் புதிய வசதியான 'UPI Tap and Pay' மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த 'MyUPI' ஆகியவற்றை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிமுகப்படுத்தியுள்ளார். NFC வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்து, கடைக்காரர்களின் POS இயந்திரத்தில் தட்டுவதன் மூலம் contactless கார்டுகளை போல பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். பயனரின் போனில் மொபைல் டேட்டா இல்லாவிட்டாலும், கடையில் உள்ள POS இயந்திரத்தின் இன்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்தி இந்தப் பரிவர்த்தனை முழுமையடையும். ரூ.5,000 வரையிலான தொகைகளுக்கு யுபிஐ பின் எண்ணை உள்ளிட தேவையில்லை. அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கு மட்டும் பிஓஎஸ் இயந்திரத்தில் பின் எண்ணை உள்ளிட வேண்டும்.
MyUPI
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான 'MyUPI' தளம்
NPCI உருவாக்கியுள்ள இந்த 'MyUPI' தளம் மூலம் பயனர்கள் தங்களின் அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளையும் ஒரே இடத்தில் கண்காணிக்க முடியும்.
கணக்கில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் தெரிந்தால், உடனடியாக யுபிஐ பரிவர்த்தனைகளை முடக்கும் வசதியும் இதிலுள்ளது.
மேலும், போன் எண் மூலம் பெறப்படும் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை நிறுத்திக் கொள்ளும் வசதி, சுயமாக புகார்களை தீர்க்கும் வசதிகளுடன், ஏஐ உதவியுடன் இயங்கும் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவையும் உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 89% யுபிஐ மூலம் நடைபெறுவதால், இந்தப் புதிய வசதிகள் யுபிஐ பயன்பாட்டை மேலும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது