ஏறிய வேகத்தில் தடாலடி சரிவு! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை தடாலடியாக சரிந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹240 குறைந்து ₹14,015 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,920 குறைந்து ₹1,12,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹262 குறைந்து ₹15,289 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,096 குறைந்து ₹1,22,312 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.
அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹240 குறைந்து ₹11,785 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,920 குறைந்து ₹94,280 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹245 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,45,000 ஆக விற்கப்படுகிறது.