இந்தியாவிலிருந்து தூதர்களை திரும்பப் பெற்றுக் கொண்ட கனடா
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிலிருந்து தூதர்களை கனடா திரும்பப் பெற்றுக்கொண்டதால், இந்தியாவில் உள்ள அந்நாட்டின் தூதராக பணிகள் அனைத்தும் முடங்கின.
இந்தியாவில் இருந்து 41 கனடா தூதர்கள் வெளியேறுவார்கள் என அறிவித்த கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, இந்தியாவில் 'நேரடி தூதரக சேவைகள்' முடங்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார்.
கனடாவில் காலிஸ்தான் இயக்கத் தலைவரான நிஜார் கொல்லப்பட்டதில், இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது, இருநாட்டு உறவுகள் இடையே விரிசலை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்திற்கு பின் இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா தூதர்களின் எண்ணிக்கையை, கனடாவில் உள்ள இந்திய தூதர்களின் எண்ணிக்கையை அளவிற்கு குறைக்க வலியுறுத்தி, இம்மாதம் 10 தேதி வரை காலக்கிடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது
2nd card
இந்தியாவின் நடவடிக்கையை நியாயமற்றது என விமர்சித்த மெலனி ஜோலி
தூதர்கள் வெளியேற்ற நடவடிக்கையை குறித்து பேசிய மெலனி ஜோலி,
"இந்தியாவின் முடிவு இரு நாடுகளிலும் உள்ள தூதரகங்களுக்கான சேவைகளின் அளவை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை."
"துரதிர்ஷ்டவசமாக, சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள எங்கள் துணைத் தூதரகங்களில் உள்ள அனைத்து நேரடி சேவைகளுக்கும் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது" என்ற அவர்,
இந்தியாவின் நடவடிக்கைகளை 'நியாயமற்றது' எனவும், இந்தியா சர்வதேச சட்டம் மற்றும் வியன்னா மாநாடு ஒப்பந்தங்களை மீறுவதாகவும் குற்றம் சாட்டினார்.
3rd car
இந்தியா வரும் கனடா மக்களுக்கு அந்நாடு பயண எச்சரிக்கை விடுப்பு
இருநாட்டு உறவுகள் இடையே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா வரும் கனடா மக்களுக்கு அந்நாடு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாரம்பரிய ஊடகங்கள், சமூக ஊடகங்களில் கனடாவுக்கு எதிராக எதிர்ப்புகள் மற்றும் சில எதிர்மறையான உணர்வுகள் எதிரொலிப்பதாக தெரிவித்த அந்நாட்டு அரசு,
"கனடா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழலாம்" எனவும், "கனடியர்கள் மிரட்டல் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகலாம்" எனவும் தெரிவித்துள்ளது.
"டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், நீங்கள் அந்நியர்களுடன் நெருங்கி பழகக்கூடாது, உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது".
"பொதுபோக்குவரத்து உட்பட நெரிசலான பகுதிகளைத் தவிர்க்கவும். நீங்கள் எப்போதும் ஒருவருடன் பயணம் செய்ய வேண்டும்" என கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.
embed
தூதர்கள் வெளியேறுவதாக அறிவித்த கனடா
Amid India-Canada diplomatic tensions, Canadian Foreign Minister Melanie Joly says "As of now, I can confirm that India has formally conveyed its plan to unethically remove diplomatic immunities for all but 21 Canadian diplomats and dependents in Delhi by October 20. This means... pic.twitter.com/tbqwk9Wv8u— ANI (@ANI) October 20, 2023