
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட பண்டிகைகள் வார இறுதி நாட்களோடு இணைந்தவாறு வருவதால் தொடர் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
பண்டிகை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம்-மெப்ஸ், பூவிருந்தவல்லி-பைபாஸ், கோயம்பேடு உள்ளிட்ட 3 இடங்களில் இந்த சிறப்பு பேருந்து நிலையங்கள் அமையவுள்ளது.
மேலும் வரும் 20ம்.,தேதி முதல் 25ம்.,தேதி வரை சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படுவதால் அனைத்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வரவேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தற்காலிக பேருந்து நிலையங்கள்
#BREAKING | தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு
— Thanthi TV (@ThanthiTV) October 19, 2023
தாம்பரம் மெப்ஸ், பூவிருந்தவல்லி பைபாஸ், கோயம்பேடு ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம்
பொதுமக்கள் வசதிக்காக ஞாயிறு வரை தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்தது போக்குவரத்து கழகம்#TNSETC… pic.twitter.com/moYxfUBXM4