
திருச்சி: ஆன்லைன் ஆர்டரில் கெட்டுப்போன திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி
செய்தி முன்னோட்டம்
திருச்சி-உறையூர் பகுதியினை சேர்ந்த ஆண்ட்ரூ, ஆன்லைனில், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையில், பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால் அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பிரியாணி, கெட்டுப்போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து கடைக்கு தகவலளித்துள்ளார், ஆண்ட்ரூ .
ஆனால் அவர்கள் எவ்வித பதிலும் கூறாததால், நேரடியாக கடைக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் சூடாக இருக்கும்போதே பேக் செய்ததால், கெட்டுப்போயிருக்கக்கூடும் என்று சம்பந்தமில்லா காரணங்களை கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஆண்ட்ரூ, மருந்து மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார்.
அதன்பேரில் கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள், 3 கிலோ.,கெட்டுப்போன இறைச்சி உணவுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து, இதுதொடர்பாக கடைக்கு அபராதம் விதித்த அதிகாரிகள் நோட்டீஸ் பிறப்பித்ததோடு, எச்சரிக்கை செய்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
கெட்டுப்போன பிரியாணி
திருச்சி : ஆன்லைன் ஆர்டரில் கெட்டுப்போன பிரியாணியை திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடை விநியோகித்ததாக புகார் வந்துள்ளது. அதையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கடையிலிருந்து கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர். இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 19, 2023