ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று(அக்.,18) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,969 கோடி நிதியினை ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கொண்டு மொத்தம் 11.07 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே, ரயில்வே ஊழியர்களின் 78 நாள் ஊதியத்தொகை, போனஸாக வழங்கப்படவுள்ளது என்றும் மத்திய அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், ரயில்வே மேலாளர்கள், லோகோ பைலட்கள், டிராக் மெயின்டேனர்ஸ் உள்ளிட்டோர் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.