டெல்லி: செய்தி

27 Dec 2023

இஸ்ரேல்

டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை 

நேற்றுமாலை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக கட்டிடத்திற்கு அருகே குண்டுவெடிப்பு நடந்தது.

26 Dec 2023

இஸ்ரேல்

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

இன்று மாலை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக கட்டிடத்திற்கு அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

டெல்லியில் ஏற்பட்டிருக்கும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிப்பு 

டெல்லியின் சில பகுதிகளில் அடர்த்தியான பனிமூட்டத்தால் கண்களுக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதை காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால். டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

24 Dec 2023

பீகார்

வீடியோ: ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தைகளை தன் உடலை வைத்து பாதுகாத்த தாய் 

நேற்று பீகார் ரயில் நிலையத்தில் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ரயில் தண்டவாளத்தில் விழுந்து அதிசயமாக உயிர் தப்பினர்.

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறாவது நபரான லலித் ஜாவிற்கு, மேலும் 14 நாட்கள் போலீஸ் காவலை நீட்டித்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார்

நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக, 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

21 Dec 2023

சத்குரு

நிதீஷ்குமாரின் "ஹிந்தி தேசிய மொழி" பேச்சுக்கு சத்குரு கண்டனம்

டெல்லியில் நடந்த 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஹிந்தியை தேசிய மொழி எனக் கூறியதற்கும், தனது உரையை மொழிபெயர்க்க அனுமதி மறுத்ததற்கும், சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

20 Dec 2023

திமுக

"ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு

டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமாரின் பேச்சை, திமுக எம்பி டிஆர் பாலு மொழிபெயர்க்க கோரியதால், கோபமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணை ஜனாதிபதியை மிமிக்ரி செய்ததற்காக திரிணாமுல் எம்பி மீது போலீசில் புகார்

திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி கல்யாண் பானர்ஜி நேற்று பாராளுமன்ற வளாகத்தில், துணை ஜனாதிபதி ஜப்கதீப் தங்கரை மிமிக்ரி செய்ததை தொடர்ந்து, அவர் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின்

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தென் தமிழ்நாட்டின் பல பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் ₹12,000 கோடியை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக GPay, Paytm ஐ தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் வங்கிக் கணக்குகளில் ஏதேனும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளதா என்பதை அறிய கூகுள்-பே மற்றும் பேடிஎம் நிறுவனத்தை டெல்லி காவல்துறை அணுகியுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

எம்பி ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக நியமனம்

சஞ்சய் சிங்குக்கு பதிலாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக எம்பி ராகவ் சத்தாவை அக்கட்சி நியமித்துள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளியான மகேஷ் குமாவத்தை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

16 Dec 2023

பாஜக

நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் பிரச்சனை குறித்து விசாரித்து வரும் டெல்லி காவல்துறை பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல்

அமெரிக்க-கனடிய குடிமகனான காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக், இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, இந்திய-அமெரிக்க அரசியல் தலைவர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள் 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தை திட்டமிட்டு செயல்படுத்திய கூட்டத்தின் மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் ராஜஸ்தானுக்கு தப்பி சென்று கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களையும் ஆதாரங்களையும் அழித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் மூளையாக செயல்பட்ட ஆறாம் நபர் டெல்லி போலீசில் சரண்

தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரத்தில், நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், இதற்கு மூளையாக இருந்த நபர் போலீசால் தேடப்பட்டு வந்தார்.

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன?

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கையாளும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, நேற்று நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி போலீசார் இதுவரை ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் சஸ்பெண்ட் 

மக்களவை பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், சபை தலைவருடன் நேருக்கு நேர் மோதியதால், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற அத்துமீறல்: குற்றவாளிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கிய பாஜக எம்பி மக்களவை சபாநாயகரை சந்தித்தார்

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு விசிட்டர் பாஸ் வழங்கிய பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்தார்.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: பிடிபட்டார் ஐந்தாவது குற்றவாளி; பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் ஐந்தாவது சந்தேக நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று!

பலத்த பாதுகாப்புகளை மீறி நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் 2 நபர்கள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் அடிபடும் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா! யார் அவர்?

இன்று மதியம், தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது, இரண்டு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்டனர்.

13 Dec 2023

மக்களவை

பாராளுமன்றத்தில் இரட்டை பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்: டெல்லி காவல்துறை

மக்களவையில் இன்று மதியம், பாதுகாப்புகளை மீறி, நாடாளுமன்றத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரு நபர்கள்: சாகர் சர்மா மற்றும் 35 வயதான டி மனோரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை

சீனா மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோவுக்கு எதிரான பண மோசடி வழக்கில், முதல் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மீதான சிறுநீரகக் திருட்டு குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு விசாரணை

டெல்லி அப்பல்லோ குழும மருத்துவமனைகள் மீது எழுந்துள்ள, உடல் உறுப்பு திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரித்து, 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

05 Dec 2023

இந்தியா

சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்றதா அப்பல்லோ மருத்துவமனை? வலுக்கும் குற்றச்சாட்டுகள் 

உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை குழுக்களில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனைகள் சட்டவிரோத உறுப்பு வர்த்தக மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

3 முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மறுத்ததால் INDIA கூட்டணி கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு 

டெல்லியில் வைத்து நாளை நடைபெறவிருந்த INDIA எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக NDTV செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம்

'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் அடுத்த கூட்டத்திற்கு, டிசம்பர் 6ம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன்

அமெரிக்கா காலிஸ்தான் பயங்கரவாதியை படுகொலை செய்வதற்கான சதி திட்டத்தில், இந்திய அதிகாரி ஒருவர் ஈடுபட்டதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணை நடத்தப்படும் இந்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி

அமெரிக்க மண்ணில் கலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும், இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரபடுத்தியுள்ள நிலையில்,

கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம் 

விமானத்தில் இருந்த தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாங்காக் நோக்கிச் சென்று கொண்டிருந்த லுஃப்தான்சா விமானம் இன்று டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.

25 Nov 2023

கொலை

சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை 

2008ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சாகேத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூதரக பதிவு எண்ணில் போலி கார்- டெல்லி காவல்துறையினர் மற்றும் வெளியுறவுத் துறையை எச்சரித்த சிங்கப்பூர் தூதர்

சிங்கப்பூர் நாட்டின் போலி தூதரக பதிவு எண்ணுடன் டெல்லியில் வலம் வரும் கார் குறித்து, டெல்லி காவல்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு, அந்நாட்டின் தூதர் சைமன் வோங் எச்சரித்துள்ளார்.

26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில், முனைவர் பட்டம் படித்து வந்த 26 வயது இந்திய மாணவர் காரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை மருத்துவ பல்கலைக்கழகம் "திடீர், சோகம் மற்றும் அர்த்தமில்லாதது" எனக் கூறியுள்ளது.

23 Nov 2023

கொலை

டெல்லியில், ₹350க்காக 18 வயது வாலிபர், சிறுவனால் 60 முறை குத்திக்கொலை

வடகிழக்கு டெல்லியின் வெல்கம் ஏரியா பகுதியில், 18 வயது வாலிபரை, கத்தியால் குத்தி கொலை செய்த 16 வயது சிறுவன், அந்த உடலின் அருகில் நடனம் ஆடும் கொடூரமான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

22 Nov 2023

கேரளா

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து 

வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் செல்லும் 38 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

22 Nov 2023

இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம்

நேஷனல் ஹெரால்டு நாளிதழுக்கு எதிரான பணமோசடி வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் நேற்று முடக்கியது.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: டெல்லி அரசு

இந்தியா தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.