
26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில், முனைவர் பட்டம் படித்து வந்த 26 வயது இந்திய மாணவர் காரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை மருத்துவ பல்கலைக்கழகம் "திடீர், சோகம் மற்றும் அர்த்தமில்லாதது" எனக் கூறியுள்ளது.
மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டதாக டபிள்யுஎக்ஸ்ஐஎக்ஸ்(WXIX- TV) தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆதித்யா அட்லாகா, சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் மூலக்கூறு மற்றும் வளர்ச்சி உயிரியல் திட்டத்தில், நான்காம் ஆண்டு முனைவர் பட்ட மாணவராக படித்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஹாமில்டன் கவுண்டி கரோனர் அலுவலகத்தின் படி, ஆதித்யா அட்லாகா இந்த மாத தொடக்கத்தில் யூசி மருத்துவ மையத்தில் இறந்தார்.
2nd card
துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெஸ்டர்ன் ஹில்ஸ் வையாடக்ட் பகுதியில், சுவற்றில் மோதிய காரில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவரின் உடலை அதிகாரிகள் கண்டறிந்ததாக, சின்சினாட்டி போலீஸ் லெப்டினன்ட் ஜொனாதன் கன்னிங்காம் தெரிவித்தார்.
துப்பாக்கி சூடுகளை கண்டறியும் சேவையான ஷாட்ஸ்பாட்டர், அந்த பகுதியில் காலை 6:20 மணி அளவில், துப்பாக்கி சூடு நடைபெற்றதாக கூறியதாக காவல்துறை கூறுகின்றனர்.
அந்த வழியாக சென்ற ஓட்டுநர்கள், 911க்கு தொடர்பு கொண்டு காரில் ஒருவர் சுடப்பட்டு நிலையில் இருப்பதாக தகவல் தெரிவித்ததாக கன்னிங்காம் கூறினார்.
யூசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆதித்யா அட்லாகா, இரண்டு நாள் சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
௩ர்ட கார்டு
யார் இந்த ஆதித்யா அட்லாகா?
டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரியில் விலங்கியல் படித்த ஆதித்யா அட்லாகா, டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் 2020 ஆம் ஆண்டில் உடலியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இந்நிலையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள, அமெரிக்க சென்றிருந்த நிலையில் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.
"அவர் மிகவும் நேசிக்கப்பட்டார், மிகவும் அன்பானவர் மற்றும் நகைச்சுவையானவர், புத்திசாலி மற்றும் கூர்மையானவர்" என அவர் பயின்ற பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.