நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு
நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறாவது நபரான லலித் ஜாவிற்கு, மேலும் 14 நாட்கள் போலீஸ் காவலை நீட்டித்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வார தொடக்கத்தில் அதே நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட காவல் காலத்தின் முடிவில், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அவரை ஆஜர்படுத்தியது. காவல்துறை வாதங்களை கேட்ட நீதிபதி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி டாக்டர் ஹர்தீப் கவுர், லலிதின் நீதிமன்ற காவலை ஜனவரி 5ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். முன்னதாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சந்தித்து, சதி திட்டத்தை தீட்டியதாக லலித் ஜா காவல்துறையிடம் தெரிவித்ததாக, அவர்கள் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.
விசாரணையில் லலித் குறித்து இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள்
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி பதட்டமான சூழ்நிலையை உருவாக்குவது மூலம், தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தலாம் என நினைத்து, அவர்கள் இவ்வாறு செய்ததாக, விசாரணையில் லலித் கூறியுள்ளார். இந்த குற்றத்தை மறைப்பதற்காக, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைபேசிகளையும் வாங்கி லலித் அழித்ததாகவும், ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி வரும் வழியில் தனது கைபேசியையும் அழித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சில தகவல்களின்படி, நாடாளுமன்ற தாக்குதலுக்கான திட்டத்தை பல மாதங்களாக லலித் தீட்டி வந்ததாகவும், நாடாளுமன்றத்திற்குள் நுழைய பாஸ் வேண்டும் என்பதால், அதை பெற முயற்சித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ராஜஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்தபடி லலித், தொடர்ந்து செய்தி தொலைக்காட்சிகள் மூலம், நாட்டில் நடந்து வரும் முன்னேற்றங்கள் மற்றும் போலீஸ் நடமாட்டங்களை கண்காணித்து வந்தார்.