NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில், ₹350க்காக 18 வயது வாலிபர், சிறுவனால் 60 முறை குத்திக்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில், ₹350க்காக 18 வயது வாலிபர், சிறுவனால் 60 முறை குத்திக்கொலை
    வாலிபரை கொலை செய்யும் சிறுவன். சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சி.

    டெல்லியில், ₹350க்காக 18 வயது வாலிபர், சிறுவனால் 60 முறை குத்திக்கொலை

    எழுதியவர் Srinath r
    Nov 23, 2023
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    வடகிழக்கு டெல்லியின் வெல்கம் ஏரியா பகுதியில், 18 வயது வாலிபரை, கத்தியால் குத்தி கொலை செய்த 16 வயது சிறுவன், அந்த உடலின் அருகில் நடனம் ஆடும் கொடூரமான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    வாலிபரிடம் ₹350 திருடுவதற்காக சிறுவன் இக்கொலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கொலை செய்த பின், வாலிபரின் உடலை இருபுறமும் வீடுகள் சூழ்ந்த குறுகிய பாதையில் அச்சிறுவன் இழுத்துச் செல்வது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் தெரிகிறது.

    பின்னர், சிறுவன் இரக்கமின்றி வாலிபரின் காதுகள், முகம், அவரது கழுத்தை வெட்டினார்.

    மேலும், அந்த சிறுவன் தொடர்ந்து இந்த வாலிபரை 60 முறை குத்துவதும், உடலின் அருகில் நடனம் ஆடும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளது.

    2nd card

    சிறுவனை 'வயது வந்தவராக' விசாரிக்க காவல்துறையினர் திட்டம்

    காவல்துறை அளித்துள்ள தகவலின் படி, முதலில் அந்த சிறுவன் இந்த வாலிபரைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர், குறுகலான பகுதிக்கு இழுத்துச் சென்று பலமுறை குத்திய பின்னர், ₹350 திருடியதாக தெரிவித்தனர்.

    இந்தியா டுடேவிடம் பேசிய வடகிழக்கு டெல்லியின் துணை போலீஸ் கமிஷனர்(டிசிபி), இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை 'வயது வந்தவராக' விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் விண்ணப்பம் செய்வார்கள் என்று கூறினார்.

    "ஒரு சாதாரண திருடன் பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிடுவான். ஆனால் இந்த விஷயத்தில் அவன் மனதில் என்ன தோன்றியது என்று தெரியவில்லை. வாலிபரை பலமுறை கத்தியால் குத்தி இருக்கிறான்" என அந்த அதிகாரி தெரிவித்தார்.

    3rd card

    பல வழக்குகளில் தொடர்புடைய சிறுவன்

    இந்தச் சிறுவன், கடந்த ஆண்டு திருடும் நோக்கோடு ஒருவரை கொலை செய்த குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    மேலும், இதற்கு முன்பு நடந்த சண்டை மற்றும் கொலை வழக்குகளில், இந்த சிறுவனுக்கு தொடர்புள்ளது குறிப்பிடத்தக்கது.

    "நாங்கள், சிறார்கள் குறித்த பதிவுகளை வைத்திருப்பதில்லை, ஆனால் கடந்த காலங்களில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் கொலை மற்றும் சண்டை வழக்குகளில் ஈடுபட்டுள்ளார்" என வடகிழக்கு டெல்லி டிசிபி, இந்தியா டுடேவிடம் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    கொலை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    டெல்லி

    அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம் அரவிந்த் கெஜ்ரிவால்
    அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய டெல்லி அரசு எலக்ட்ரிக் வாகனங்கள்

    கொலை

    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    3 மாதங்களில் 6,500 க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்கள், 75 கொலை வழக்குகள்; ஆனால் ஒரு தடயவியல் ஆய்வகம் மணிப்பூர்
    மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை  மணிப்பூர்
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா

    காவல்துறை

    மணிப்பூரில் ராணுவ வீரரின் தாய், 3 குடும்பத்தினர் கடத்தல் மணிப்பூர்
    டிக்கெட் விலை அதிகரிப்பு: ஆம்னி பேருந்து குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு ஆம்னி பேருந்துகள்
    இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன? அமெரிக்கா
    கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து இஸ்ரேல்

    காவல்துறை

    சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு; குற்றவாளி கைது  கைது
    லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை  கைது
    4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி ராஜஸ்தான்
    திரையரங்கில் அமைச்சர் மகன் ரமேஷ் தாக்கப்பட்ட விவகாரம் - போலீசார் விசாரணை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025