Page Loader
எம்பி ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக நியமனம்
ராஜ்யசபாவின் இளம் உறுப்பினர்களில் சத்தாவும் ஒருவர் ஆவார்.

எம்பி ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக நியமனம்

எழுதியவர் Sindhuja SM
Dec 16, 2023
05:10 pm

செய்தி முன்னோட்டம்

சஞ்சய் சிங்குக்கு பதிலாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக எம்பி ராகவ் சத்தாவை அக்கட்சி நியமித்துள்ளது. "உடல்நலப் பிரச்சனைகள்" காரணமாக தலைவர் சஞ்சய் சிங் தற்போது தனது பதவியில் இல்லாததால், இனிமேல் ஆம் ஆத்மியின் ராஜ்யசபா தலைவராக ராகவ் சத்தா இருப்பார் என்று ராஜ்யசபா தலைவருக்கு எழுதிய கடிதத்தில் அக்கட்சி கூறியுள்ளது. ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தற்போது டெல்லி மதுக் கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சி அனுப்பிய கடிதம் தங்களுக்கு கிடைத்ததாக ராஜ்யசபா செயலக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

திலகவா

இளம் உறுப்பினரான சத்தா ராஜ்யசபா தலைவராக நியமனம் 

ஆம் ஆத்மியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அந்த கடிதம் தற்போது ராஜ்யசபா பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவின் இளம் உறுப்பினர்களில் சத்தாவும் ஒருவர் ஆவார். ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது ராஜ்யசபாவில் மொத்தம் 10 எம்பிக்கள் உள்ளனர். பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சிக்கு தான் ராஜ்யசபாவில் அதிக பலம் உள்ளது. டெல்லி அரசு அதிகாரிகள் மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசிற்கு வழங்கும் டெல்லி சேவைகள் ஆணை தொடர்பான பிரச்சனையில் ராஜ்யசபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராகவ் சத்தாவின் இடைநீக்கம், கடந்த வாரம் தான் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.