
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: டெல்லி அரசு
செய்தி முன்னோட்டம்
இந்தியா தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.
இன்று(நவ.,21)காலை டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான அளவினை அடைந்துள்ளது.
அதன்படி காற்றின் தர குறியீடு 323-ஆக இருந்துள்ளது.
டெல்லி ஐஐடி பகுதியில் காற்றின் தர குறியீடு 321 ஆகவும், விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் காற்றின் தர குறியீடு 336-ஆகவும், பூசா பகுதியில் 337-ஆகவும் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் பேசுகையில், 'கடந்தாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பஞ்சாப் அரசு வேளாண் கழிவுகளை எரிப்பதை 50% அளவிற்கு கட்டுப்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளார்.
டெல்லி
சிறப்பு செயலாளர் தலைமையின்கீழ் 6 பேர் கொண்ட அதிரடிப்படை அமைப்பு
தொடர்ந்து பேசிய அவர், 'இதற்கு முன்னர் காற்றின் தரம் இதனைவிட மோசமாக இருந்ததுள்ளது. ஆனால் தற்போது காற்றின்தரம் சீராக முன்னேற்றம் அடைந்து வருகிறது, வரும் நாட்களில் இதன் தரம் மேம்படும்' என்றும் கூறியுள்ளார்.
மேலும், காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த டெல்லி மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று கூறிய அவர், இந்த விஷயத்தில் டெல்லி அரசு தீவிர கண்காணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாசுபாட்டினை குறைக்க விதிகளை முறையாக பின்பற்றுவதை கண்காணிக்க சுற்றுசூழல் சிறப்பு செயலாளர் தலைமையின்கீழ் 6 பேர் கொண்ட அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை முதல் பி.எஸ்.3 மற்றும் பி.எஸ்.4 பெட்ரோல்-டீசல் வாகனங்கள் தவிர பிற லாரிகளும், பேருந்துகளும் காற்றின் தரம் மேம்பட்ட காரணத்தினால் நகருக்குள் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.