டெல்லியில் ஏற்பட்டிருக்கும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிப்பு
டெல்லியின் சில பகுதிகளில் அடர்த்தியான பனிமூட்டத்தால் கண்களுக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதை காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால். டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லியில் பாதரசத்தின் அளவு 9.4 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகரின் பல்வேறு பகுதிகளில் 125 மீட்டருக்கு தொலைவில் உள்ளவைகளை மட்டுமே பார்க்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்படைந்துள்ளது. டெல்லி NCR பகுதியிலும் அடர்ந்த மூடுபனியின் தாக்கம் அதிகரித்து, பார்வைத்திறனை குறைந்துள்ளது.
கடும் குளிர், காற்று மாசு மற்றும் மூடுபனியால் மக்கள் சிரமம்
டெல்லியில் குளிர் கடுமையாகி கொண்டே இருப்பதால், குடியிருப்பாளர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள இரவு தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். குளிரில் இருந்து தப்பிக்க சாலை ஓரங்களில் தீ மூட்டி, கூட்டமாக மக்கள் சேர்ந்து குளிர் காய்ந்து வரும் காட்சிகளையும் டெல்லியில் பார்க்க முடிந்தது. லோதி சாலை, முனிர்கா, ஆர்.கே.புரம் மற்றும் எய்ம்ஸ் அருகில் உள்ள ரிங் ரோடு போன்ற முக்கிய இடங்களிலில் அடர்ந்த மூடுபனி படர்ந்திருப்பதை தெளிவாக காண முடிந்தது. மேலும், டெல்லி பகுதியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' நிலையில் உள்ளது. இன்று காற்றுத் தரக் குறியீடு (AQI) சுமார் 400 ஆக இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகள் கூறுகின்றன.