"ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமாரின் பேச்சை, திமுக எம்பி டிஆர் பாலு மொழிபெயர்க்க கோரியதால், கோபமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் டி.ஆர் பாலு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றருந்த நிலையில், ஆலோசனை கூட்டம் 3 மணி நேரம் நடந்தது.
இதில், நிதிஷ்குமார் ஹிந்தியில் பேசியது புரியாததால், அவரது பேச்சை மொழிபெயர்க்கக் கேட்டு, ராஷ்ட்ரிய ஜனதா தள மாநிலங்களவை எம்பி மனோஜ் கே. ஜாவிடம், டி.ஆர் பாலு சைகை செய்ததாக கூறப்படுகிறது.
2nd card
"நமது தேசிய மொழி ஹிந்தி"
எம்பி மனோஜ் கே.ஜா, மொழிபெயர்க்க நிதீஷ் குமாரிடம் கேட்டபோது அவர் கோபம் அடைந்ததாக தெரிகிறது.
"நாம் நமது நாட்டை இந்துஸ்தான் என்றும், இந்தி நமது தேசிய மொழி என்றும் அழைக்கிறோம். அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும்" என அவர் தெரிவித்ததோடு, தனது உரையை மொழிபெயர்க்க எம்பி மனோஜ்க்கு அனுமதியும் மறுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம், நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பகிர்வு மற்றும் பிரச்சார உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.