NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து 
    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து

    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து 

    எழுதியவர் Nivetha P
    Nov 22, 2023
    01:10 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் செல்லும் 38 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா ரயில் நிலையத்தில் வடக்கு ரயில்வே சார்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    ரத்து 

    தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து 

    இதன் காரணமாக அவ்வழியே சென்னை, மதுரை, கோவை மற்றும் கேரளாவின் கொச்சுவேலியில் இருந்து செல்லும் 38 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பின் படி, சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லிக்கு செல்லும் துரந்தோ விரைவு ரயில் ஜனவரி 15ம் தேதி முதல் பிப்.,3ம் தேதி வரையும், ராஜ்தானி விரைவு ரயில் ஜனவரி 31 முதல் பிப்.,4ம் தேதி வரையும், கரீப் ரத் விரைவு ரயில் ஜனவரி 16 முதல் பிப்.,3 வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    ரத்து 

    மில்லினியம் விரைவு ரயில் சுமார் 1 மாதம் வரை ரத்து 

    இதனை தொடர்ந்து மதுரையில் இருந்து புறப்படும் சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் ஜன.16 முதல் பிப்.,6 வரையும், கோவையில் இருந்து புறப்படும் கொங்கு ரயில் ஜன.,21 முதல் ஜன.,31 வரையும், கன்னியாகுமாரி-டெல்லி திருக்கு விரைவுரயில் ஜன.,10 முதல் பிப்.,2 வரையும், புதுச்சேரியில் இருந்து டெல்லி கிளம்பும் அதிவிரைவு ரயில் ஜன.,21 முதல் பிப்.,7 வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும், திருவனந்தபுரம்-டெல்லி செல்லும் அதிவிரைவு ரயில் ஜன.,13 முதல் பிப்.,5 வரையும், மில்லினியம் விரைவு ரயில் ஜன.,6 முதல் பிப்.,6 வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஜன.,10 முதல் பிப்.,5 வரை மதுரை-சண்டிகர் விரைவு ரயிலும் ரத்து செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கிறது

    மாற்று பாதை 

    ஆக்ராவிலிருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ள ரயில்கள் 

    தொடர்ந்து, ஜன.,27 முதல் பிப்.,5 வரை கேரள அதிவிரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எர்ணாகுளம்-டெல்லி செல்லும் அதிவிரைவு ரயில் ஜன.,10 முதல் பிப்.,2 வரையும், விரைவு ரயிலான கொச்சுவேலி-அமிர்தசரஸ் செல்லும் ரயில் ஜன.,14 முதல் பிப்.,7 வரையிலும் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே கொச்சுவேலி சம்பர்க் கிராந்தி விரைவு ரயில், சென்னை-டெல்லி தமிழ்நாடு விரைவு ரயில் மங்களா லட்சத்தீவு விரைவு ரயில் உள்ளிட்டவைகளுக்கு ஆக்ரா நிறுத்தத்தில் இருந்து மாற்று பாதையில் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    புனித ஸ்தலம் 

    புனித ஸ்தலங்களுக்கு செல்லும் ரயில்களும் ரத்து 

    இதனையடுத்து புனித ஸ்தலமான ஸ்ரீ வைஷ்ணவ தேவி கேந்த்ராவுக்கு கன்னியாகுமாரியில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயிலான ஹிம்சாகர் ஜன.,12 முதல் பிப்.,5 வரையும், நெல்லையில் இருந்து செல்லும் விரைவு ரயில் ஜன.,8 முதல் பிப்.,1 வரையும், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் அந்தமான் விரைவு ரயில் ஜன.,10 முதல் பிப்.,6ம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதே போல், ஜன.,12 முதல் பிப்.,5 வரை ரிஷிகேஷுக்கு கேரளா கொச்சுவேலி பகுதியில் இருந்து புறப்படும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    டெல்லி
    ரயில்கள்
    தெற்கு ரயில்வே

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை

    கேரளா

    ராமேஸ்வரம் கடற்பகுதி - புதிய கடல் வாழ் நுண்ணுயிருக்கு அப்துல் கலாம் பெயர் அப்துல் கலாம்
    இணையத்தில் ட்ரெண்டாகும் 'KeralaBoycottLeo' ஹேஷ்டேக் - கேரளாவில் லியோ புறக்கணிப்பு? சினிமா
    நிபா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் கேரளா கோழிக்கோட்டில் நாளை பள்ளிகள் திறப்பு  நிபா வைரஸ்
    லியோ இசை வெளியீட்டு விழாவை கொச்சியில் நடத்த கேரளா விநியோகஸ்த நிறுவனம் விருப்பம் நடிகர் விஜய்

    டெல்லி

    ஒரே பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல்  உச்ச நீதிமன்றம்
    அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம் அரவிந்த் கெஜ்ரிவால்
    அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்

    ரயில்கள்

    'ட்ரெயின்மேன்' தளத்தை கையகப்படுத்தியதன் மூலம் IRCTC-க்கு போட்டியாக வருகிறதா அதானி? இந்திய ரயில்வே
    சென்னையில் இருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை  சென்னை
    ஒடிசா ரயில் விபத்து மனித தவறினால் ஏற்பட்டது: CRS அறிக்கை இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே ஊழியர்கள் கைது  இந்திய ரயில்வே

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! தொழில்நுட்பம்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை ரயில்கள்
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025