Page Loader
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

எழுதியவர் Sindhuja SM
Dec 26, 2023
09:16 pm

செய்தி முன்னோட்டம்

இன்று மாலை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக கட்டிடத்திற்கு அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது குறித்து பேசிய இஸ்ரேல் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், "தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 5:08 அளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்புக் குழு இன்னும் நிலைமையை ஆராய்ந்து வருகிறது" என்று கூறியுள்ளார். தலைநகர் டெல்லியின் தூதரகப் பகுதியான சாணக்யபுரி பகுதியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்குப் பின்னால் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து டெல்லி காவல்துறை உஷார்படுத்தப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் டெல்லி தீயணைப்புத் துறைக்கு ஒரு அடையாளம் தெரியாத நபர் அழைத்து குண்டுவெடிப்பு குறித்து தகவல் தெரிவித்தார்.

டக்ஜ்வ்க்ப் 

சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமான எதுவும் காணப்படவில்லை

இஸ்ரேலிய தூதரகத்திற்குப் பின்னால் உள்ள வெற்றுப் பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அந்த அடையாளம் தெரியாத நபர் கூறி இருக்கிறார். இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரும் போலீஸாரின் சிறப்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு, அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான எதுவும் காணப்படவில்லை என்று டெல்லி தீயணைப்புத் துறைத் தலைவர் தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பில் சத்தம் மிக அதிகமாக இருந்தது என்று கண்ணால் பார்த்த சாட்சி ஒருவர் கூறியிருக்கிறார். "இது மாலை 5 மணியளவில் நடந்தது. நான் எனது பணியில் இருந்தபோது, ​​​​பலத்த சத்தம் கேட்டது. உடனே நான் வெளியே வந்து பார்த்தேன். அப்போது ​​​​ஒரு மரத்தின் உச்சியில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டேன்," என்று அந்த சாட்சி கூறியுள்ளது.