நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று!
செய்தி முன்னோட்டம்
பலத்த பாதுகாப்புகளை மீறி நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் 2 நபர்கள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் 22 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதலை சற்று நினைவு கூறுவோம்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி காலை 11.40 மணியளவில் பாகிஸ்தான் நாட்டினை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, போலி உள்துறை அமைச்சகம் மற்றும் பாராளுமன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டிய அம்பாசிடர் காரில் நாடாளுமன்றம் வளாகத்திற்குள் ஊடுருவினர்.
விசாரணை
காரில் வந்திறங்கிய 5 தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு
இந்த கார் பில்டிங் கேட் எண்.12ஐ நோக்கி விரைந்துள்ளது. இதனால் அங்கிருந்த ஊழியர் ஒருவர் காரை பின்னே வரும்படி வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அப்போதைய துணை ஜனாதிபதி கிரிஷன் காந்தியின் வாகனத்தின் மீது வேகமாக இந்த கார் சென்று மோதியது.
அதிலிருந்து இறங்கிய 5 தீவிரவாதிகள் உடனே ஏகே.47 கொண்டு துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதன் காரணமாக அங்கிருந்த அலாரம் அடிக்கப்பட்டு அனைத்து கதவுகளும் மூடப்பட்டது.
இதனால் நாடாளுமன்றத்திற்குள் இருந்த 100க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் உயர் தப்பினர்.
கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இந்த தாக்குதலில் 8 பாதுகாப்பு படையினர், ஓர் தோட்டக்காரர் என 9 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் வெளியாகியது.
கொலை
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது
தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் இதில் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் செல்போன் பதிவுகளின் உதவியோடு விசாரணை மேற்கொண்டது.
1994ல் தீவிரவாதி முகமது அப்சல் குரு, அவரது உறவினர் ஷெளகத் ஹுசைன் குரு, அவரது மனைவி அப்சன் குரு மற்றும் டெல்லி பல்கலைக்கழக அரபு மொழி விரிவாளர் எஸ்.ஏ.ஆர்.ஜீலானி உள்ளிட்டோர் சரணடைந்தனர்.
இதுகுறித்த விசாரணையின் இறுதியில் நீதிமன்றம் அப்சனை விடுதலை செய்தது.
முதல்வர்
அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனையினை உறுதி செய்த உச்சநீதிமன்றம்
மற்ற 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து 2003ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டதில் ஜீலானியும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து 2005ல் உச்சநீதிமன்றம் ஷெளகத்தின் தண்டனையினை 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்தது.
ஆனால் 2005ல் மேல்முறையீடு செய்யப்பட்டபோது அப்சல் குருவுக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையினை உறுதி செய்ததன் காரணத்தினால், அவருக்கு மற்ற நீதிமன்றங்களில் எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.
பாதுகாப்பு
அப்சல் குரு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார்
இவருக்கான கருணை மனுவினை அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் அப்சல் குருவின் மனைவி தபசும் குரு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நிராகரிக்கப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு 2013ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி அப்சல் குரு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
சிறை வளாகத்திற்குள்ளேயே அவரது உடல் அடக்கமும் செய்யப்பட்டது.