சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை
செய்தி முன்னோட்டம்
2008ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சாகேத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ரவி கபூர், அமித் சுக்லா, பல்பீர் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகிய 4 பேருக்கும் ரூ. தலா 25,000 மற்றும் மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் (MCOCA) கீழ் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது குற்றவாளியான அஜய் சேத்திக்கு மட்டும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் காவல்துறை சார்பாக கோரப்பட்ட உச்சபட்ச தண்டனையான மரணதண்டனை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அக்டோபர்-18 அன்று IPC-302 மற்றும் MCOCA இன் விதிகளின் கீழ் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை
Journalist Soumya Viswanathan's murder: Four convicted to life imprisonment #SoumyaViswanathan #crime https://t.co/RMAaDrgqcL
— Onmanorama (@Onmanorama) November 25, 2023