வீடியோ: ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தைகளை தன் உடலை வைத்து பாதுகாத்த தாய்
நேற்று பீகார் ரயில் நிலையத்தில் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ரயில் தண்டவாளத்தில் விழுந்து அதிசயமாக உயிர் தப்பினர். அவர்கள் தண்டவாளத்தில் விழுந்ததும் அந்த வழியாக வந்த ரயில் ஒன்று அவர்கள் விழுந்த வேகமாக தண்டவாளத்தை கடந்து சென்றது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண் தன் குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக தன் உடலை வைத்து அந்த குழந்தைகளை பாதுகாத்தார். அந்த சம்பத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. தண்டவாளத்தில் விழுந்த மூவரும் காயமின்றி உயிர் தப்பினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணும் அவரது குழந்தைகளும் தங்கள் குடும்பத்தினருடன் டெல்லிக்கு செல்ல பீகார் ரயில் நிலையத்திற்கு சென்றனர். அப்போது கூட்ட நெரிசலில் மூவரும் தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.