இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

இன்ஸ்டாகிராம் மூலமாக இரயிலில் உணவு டெலிவரி! அசத்தும் தனியார் சேவை நிறுவனம்!

இதுவரை இரயில் பயணங்களின் போது, பல நேரங்களில் நல்ல உணவு கிடைக்காமல் சிரமப்பட்டிருப்போம். இனி அந்தக் கவலை இல்லை. இரயில் பயணம் செய்வர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் புதிய சேவையை தொடங்கியிருக்கிறது, IRCTC-யின் அங்கீகாரம் பெற்ற ஸூப் (Zoop) என்ற நிறுவனம்.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை 

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்டரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காவல்துறை உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையினை நடத்தினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - மத்திய தலைமை வழக்கறிஞரை சந்தித்த தமிழக ஆளுநர் 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து, தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

பாக்., பெண் ஏஜென்டிடம் முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்த வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊழியர் ஒருவர், பெண் சபலத்தால், பல முக்கியமான அரசு தகவல்களை பாகிஸ்தானிற்கு பகிர்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

11 Jul 2023

டாடா

ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாகவிருக்கும் டாடா

இந்தியாவில், ஆப்பிள் ஐபோன்களை அசெம்பிள் செய்யும் மூன்று தைவான் நிறுவனங்களில் ஒன்றாக இயங்கி வந்தது விஸ்ட்ரான் நிறுவனம். 2017-ல் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளைத் தொடங்கிய இந்நிறுவனம்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினந்தோறும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மீதான சிறப்பு அந்தஸ்தினை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.

பிஞ்சு குழந்தைகளை காவு வாங்கிய பள்ளிப்பேருந்து விபத்து: வைரலாகும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள டெல்லி- மீரட் தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை, பள்ளிப்பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளானது.

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை 

மேற்கு வங்காளத்தில், கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமையன்று கடும் வன்முறை அரங்கேறியது.

கவர்னர் குறித்து ஸ்டாலின் எழுதிய புகார் கடிதம் - உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய ஜனாதிபதி 

இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றுகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு கொடுத்த உரையில் இருந்த சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு படித்தது, முதல்வர் பேசிக்கொண்டிருக்கையில் அவையிலிருந்து வெளியேறிய சம்பவம் போன்றவை அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 11

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணபரிமாற்றம் செய்துள்ளதாக, அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், வருமான வரித்துறையினரும் அவர் சார்ந்த இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

11 Jul 2023

இந்தியா

வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை

இந்தியாவில் தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் மற்றும் இந்திய நிறுவனமான வேதாந்தா இணைந்து புதிய செமிகண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்குவதற்காகத் திட்டமிட்டு வந்தன.

11 Jul 2023

பாஜக

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்: EPSக்கு அழைப்பு

எதிர்நோக்கும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், கூட்டணி விவகாரங்களை பேசவும், வரும் ஜூலை 18 ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி டெல்லியில் சந்திக்கவுள்ளது.

ஹிமாச்சலில் கனமழையால் கடும் பாதிப்பு - தமிழகம் துணை நிற்கும் என மு.க.ஸ்டாலின் ட்வீட் 

ஹிமாச்சல பிரதேசம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

கடலூர், சிதம்பரம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் ஒன்று எழுந்தது.

தமிழகத்தில் மேலும் 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை 

கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

10 Jul 2023

சென்னை

மகளிர் உரிமை தொகை திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 

சென்னை மாவட்டத்தில் திராவிட இயக்க எழுத்தாளரான திருநாவுக்கரசு அவர்களின் இல்ல திருமணவிழா அண்மையில் நடந்தது.

பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

மணிப்பூர் சட்டம் ஒழுங்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை இயக்க முடியாது என்றும், அதைச் செய்வது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் வேலை என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், திங்கட்கிழமை (ஜூலை10), மணிப்பூர் நிலைமை குறித்த ஒரு சில மனுக்களை விசாரித்த போது கூறினார்.

புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் கோ ஏர்லைன்ஸ் நிறுவனம்

நிதிநெருக்கடியில் சிக்கியிருக்கும் GO Airlines விமான நிறுவனமானது கடந்த மே மாதம் திவால் தீர்வு நடவடிக்கைக்காக விண்ணப்பித்திருந்தது. ரூ.11,000 கோடி கடனில் சிக்கியிருக்கும் அந்நிறுவனம், ரூ.10,000 வரை இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்து தீர்வு நடவடிக்கைக்கு விண்ணப்பத்திருந்தது.

ரயிலில் தீயினை பரவாமல் தடுக்க ரயிலை ஒன்றுக்கூடி தள்ளிய வீடியோ இணையத்தில் வைரல் 

கடந்த 7ம்தேதி ஹவுராவில் இருந்து செகந்திரபாத் சென்றுக்கொண்டிருந்த ஃலக்னுமா விரைவு ரயில் ஹைதராபாத் அருகில் சென்ற பொழுது திடீரென தீ பிடித்து எரிந்தது.

ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து 

சென்னை பரங்கிமலை பகுதியில் வசித்துவந்த கல்லூரி மாணவி சத்யப்ரியா, அதேப்பகுதியிலுள்ள சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனம் செய்த குளறுபடி: கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை இந்திய பகுதியாகக் காட்டியதால் எழுந்த சர்ச்சை 

கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகக் காட்டியிருக்கிறது ட்விட்டர் தளம். மேலும், கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியானது, இந்தியாவின் ஜம்மூ காஷ்மீர் பகுதியில் இருப்பதாகவும் காட்டியிருக்கிறது அந்த தளம்.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின் 

சென்னை திருவல்லிக்கேணி, என்.கே.டி.தேசிய பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11வதுவகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவானது நடந்தது.

10 Jul 2023

டிராய்

வாய்ஸ் கால்கள் மற்றும் SMS மூலம் பெறும் வருவாயை இழந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் வாய்ஸ் கால்கள் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் வருவாயனது 80%-மும், SMS சேவை மூலம் பெறும் வருவாயானது 94%-மும் குறைந்திருப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

10 Jul 2023

டெல்லி

லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது 

வடமாநிலங்களான டெல்லி, உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், போன்ற இடங்களில் தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

பத்திரப்பதிவு சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது - தமிழக அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் பத்திரப்பதிவு துறையில் முத்திரை தீர்வை, ஆவணப்பதிவு உள்ளிட்ட சேவைக்கான கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

10 Jul 2023

இலங்கை

பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர் 

இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே வரும் 21ம் தேதி அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 10

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு

விமான நிலையங்களில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேனர்களைப் பொருத்த ரூ.1,000 கோடி மதிப்பில் ஒப்பந்தத்தை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் AAI (Airport Authority of India) அமைப்பு.

10 Jul 2023

டிராய்

புதிய ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான ஏலத்தை நடத்த ட்ராயை அணுகும் தொலைத்தொடர்புத் துறை

2024-ம் ஆண்டு காலாவதியாகவிருக்கும் ஸ்பெக்ட்ரம் பேண்டுகளின் உரிமங்களுக்கு ஏலம் நடத்துவது தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை (TRAI) அணுகவிருக்கிறது மத்திய தொலைத்தொடர்புத் துறை.

10 Jul 2023

பருவமழை

41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை 

தலைநகர் டெல்லி முதற்கொண்டு, வடமாநிலங்கள் பலவற்றிலும் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல நகரங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

09 Jul 2023

டெல்லி

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை 

அதீத கனமழை காரணமாக, டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலில் கனமழை: வெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட கார்களின் வீடியோ வைரல் 

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதாக என்று செய்திகள் தெரிவிக்கிறது.

09 Jul 2023

கைது

ஆருத்ரா வழக்கு - தலைமறைவாக இருந்த இயக்குநர்களுள் ஒருவர் கைது 

தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

திருப்பதியில் இருந்து விஜயவாடா சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு 

திருப்பதிலிருந்து விஜயவாடா நோக்கி வந்துக்கொண்டிருந்த கார் மீது எதிரே வந்த லாரி ஒன்று மோதியுள்ளது.

பழங்கால நீராவி ரயில் என்ஜின் வடிவில் புதிய சுற்றுலா ரயில் அறிமுகம் 

பழங்கால நீராவி ரயில் போல தோற்றம் கொண்ட ரயிலை விரைவில் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

09 Jul 2023

கைது

லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி 

மென்பொருள் பொறியாளராக பெங்களூர் தனியார்நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் அகாங்ஷா.

09 Jul 2023

ரஷ்யா

குறையும் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடி, காரணம் என்ன?

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த தள்ளுபடியானது 30 அமெரிக்க டாலர்களில் இருந்து, 4 அமெரிக்க டாலர்களாகக் குறைந்திருக்கிறது.

அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,