
ரயிலில் தீயினை பரவாமல் தடுக்க ரயிலை ஒன்றுக்கூடி தள்ளிய வீடியோ இணையத்தில் வைரல்
செய்தி முன்னோட்டம்
கடந்த 7ம்தேதி ஹவுராவில் இருந்து செகந்திரபாத் சென்றுக்கொண்டிருந்த ஃலக்னுமா விரைவு ரயில் ஹைதராபாத் அருகில் சென்ற பொழுது திடீரென தீ பிடித்து எரிந்தது.
ரயிலில் இருந்த S2ல் இருந்து S6 வரையுள்ள பெட்டிகளில் தீப்பரவியதாக கூறப்படுகிறது.
தீ எரியத்துவங்கிய நிலையில், பொம்மைப்பள்ளி-பகிடப்பள்ளி இடையே இந்த ரயிலானது நிறுத்தப்பட்டு, அதிலிருந்த பயணிகள் கீழே இறங்கியுள்ளனர்.
இதனால் உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
பின்னர் மீட்புப்பணியின்பொழுது, S1, S2மற்றும் பொதுப்பெட்டி உள்ளிட்ட 3 பெட்டிகள் ரயிலிலிருந்துதனியே கழட்டிவிடப்பட்டது.
அப்பெட்டிகளை இழுத்துச்செல்ல இன்ஜின் வரும்வரை காத்திருந்தால், மற்றப்பெட்டிகளுக்கு தீப்பரவ வாய்ப்புள்ள காரணத்தினால், ரயில்வே காவல்துறை, பாதுகாப்புப்படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றுக்கூடி ரயிலை தள்ளியுள்ளனர்.
இவ்வீடியோ இணையத்தில் வைரலானநிலையில், ஆபத்துக்காலத்தில் ஒன்றுக்கூடும் உணர்வினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
ரயிலினை ஒன்றுகூடி தள்ளும் வீடியோ
#Watch | தீப்பற்றிய பெட்டிகளில் இருந்து தீ பரவுவதைத் தடுக்க, ரயிலை ஒன்றுகூடித் தள்ளிய பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் மக்கள்!
— Sun News (@sunnewstamil) July 10, 2023
கடந்த 7ம் தேதி, ஹவுரா - செகந்திராபாத் இடையிலான ஃபலக்னுமா விரைவு ரயில், தெலங்கானா மாநிலம் பகிடிபள்ளி அருகே வந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது
S2… pic.twitter.com/y6eTy3xDwF